Tomato Price: ஒரே நாளில் பல்டி அடித்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? கதறும் இல்லத்தரசிகள்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், காய்கறி சந்தைக்கு தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலையானது கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
சமையலும் காய்கறிகளும்
சமையல் என்றாலே காய்கறிகள் தான் முக்கிய தேவையாக இருக்கும். அதிலும் சமையலில் ருசியை கொடுப்பது தக்காளி மற்றும் வெங்காயமாகும். இதன் விலை மட்டும் உயர்ந்தால் இல்லத்தரசிகள் நிலை அதோ கதிதான், அந்த வகையில் மாத பட்ஜெட்டில் தக்காளி, வெங்காயம் வாங்குவதற்கு என்று தனியாக பணத்தை ஒதுக்குவார்கள். எனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது. இதற்கு போட்டியாக வெங்காயத்தின் விலையும் புதிய உச்சத்தை தொட்டிருந்தது.
இதனால் இல்லத்தரசிகள் குறைவான அளவில் தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இதனையத்து வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது சரிந்தது. தற்போது பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய் வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலையானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. அடுத்தடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய செய்து பட்டு வந்தது.
கனமழையால் தக்காளி விலை உயர்ந்தது
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன்காரணமாக பல இடங்களில் செடிகளிலேயே தக்காளி அழுகி விடுவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலையானது திடீரென உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. மேலும் வரும் நாட்களில் மழை இன்னும் தீவிரமடையும் என்ற காரணத்தால் தக்காளியின் வரத்து குறைந்து மேலும் தக்களி நிலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய காய்கறி விலை என்ன.?
இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையானது கிடு கிடுவென உயர்ந்துள்ளது. பீட்ரூட் விலை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் விலை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு விலை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி 45 முதல் 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயத்தின் விலை 20 முதல் 25 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





















