தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தொடரும் இரவு மின்வெட்டு.. தவித்த மக்கள், மாணவர்கள்.. என்ன நடந்தது?
வெயில் ஏற்படுத்தும் அனலால் வெளிய போகவும் முடியாமலும், வீட்டுக்குள்ளேயும் இருக்க முடியாமலும் தவித்து வருவதாகவும் பொதுமக்கள் புலம்பி தவித்து வருகின்றனர்.
கோடை காலம் தொடங்கி வெயில் கடுமையாக மாறியுள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதே வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் இன்னும் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், வெயிலை சமாளிக்க முடியாமல் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் 1 முதல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுவதாகவும், வெயில் ஏற்படுத்தும் அனலால் வெளிய போகவும் முடியாமலும், வீட்டுக்குள்ளேயும் இருக்க முடியாமலும் தவித்து வருவதாகவும் பொதுமக்கள் புலம்பி தவித்து வருகின்றனர்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு இது ஆண்டு தேர்வு நேரம் என்பதால், இரவு நேரங்களில் மின்வெட்டு காரணமாக படிக்க முடியவில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வரும் மின்சாரம் திடீரென இன்று இரவு தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சூழலில் இந்தப் பற்றாகுறையை போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 20, 2022
இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.(2/2)
இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
எங்கெங்கு மின்வெட்டு :
நேற்று இரவு திருவாரூர், திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களில் இரவு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அரியலூர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு நகர்ப்புறத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும், கிராமப்புற பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் என்ன சொன்னார் அமைச்சர் செந்தில் பாலாஜி?
கடந்த 2 தினங்களுக்கு முன்பாக மின்சாரம் தொடர்பான மீதான விவாதம் சட்டபேரவையில் நடைபெற்றது. அப்பொழுது, பல்வேறு தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோடை காலம் நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டில் மின்வெட்டு நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டு இல்லை என்றும், இனி வரும் காலங்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி "தமிழ்நாட்டில் இனி மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்து முழுதாக மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் 2 மணிநேரத்திற்கு மேலாக தடைப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்