மேலும் அறிய

Pongal Festival 2023 LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ஒரே சுற்றில் 9 காளைகளை அடக்கி, 2 சுற்று முடிவில் முதலிடத்தைப் பிடித்தார் கார்த்தி எனும் இளைஞர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 15ஆம் தேதி) அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17-ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

LIVE

Key Events
Pongal Festival 2023 LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ஒரே சுற்றில் 9 காளைகளை அடக்கி, 2 சுற்று முடிவில் முதலிடத்தைப் பிடித்தார் கார்த்தி எனும் இளைஞர்

Background

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 15ஆம் தேதி) அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17-ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு madurai.nic.in இணையதளம் மூலம் பதிவு கடந்த 10 ஆம் தேதி நண்பகல் 12.10மணிக்கு தொடங்கி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு நடைபெற்று நிறைவு பெற்றது.

இந்த ஆன்லைன் முன்பதிவில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே போட்டிகளில் பங்கேற்பதற்கான அனுமதி டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும்.  டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக், உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில், காளைகளுக்கு எந்தவொரு துன்புறுத்தலும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும். அதன் பின்னர் அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து முன்அனுமதி பெறாத ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. கால்நடை வதைத் தடுப்பு விதிகளை பின்பற்றி போட்டிகளை நடத்துகிறவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து முன்அனுமதி பெறாத ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. கால்நடை வதைத் தடுப்பு விதிகளை பின்பற்றி போட்டிகளை நடத்துகிறவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.

மேலும் விதிகள் படி பார்வையாளர்கள் மாடம் அமைத்திருக்க வேண்டும், போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் விதிகளை பின்பற்றுவதற்கான உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும், மாநில அளவிலான ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றி இருக்க வேண்டும், காளை உள்ளிருந்து வெளியே செல்லும் வரையில் காட்சி பதிவு செய்திருக்க வேண்டும், போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 300ஆக் இருக்க வேண்டும், மூன்று நாட்களுக்கு முன்னரே வீரர்களின் பெயர் பதிவு செய்திருக்க வேண்டும், கட்டாயம் மாடுகளுக்கான அவசர ஊர்தி நிறுத்தி வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது.

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள, புனித அடைக்கல மாதா அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

11:58 AM (IST)  •  15 Jan 2023

Pongal Festival 2023 LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 4 சுற்றுகள் நிறைவு - களமிறங்கிய 305 காளைகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில்  305 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளது. 22 வீரர்கள் காயமடைந்துள்ளனர்

10:34 AM (IST)  •  15 Jan 2023

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 423 காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கல்..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10:30  வரை 423க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 40 காளைகள் முறையற்ற ஆவணங்களால் தகுதியற்றதகாக அறிவிக்கப்பட்டு  வெளியேற்றப்பட்டுள்ளது.

10:02 AM (IST)  •  15 Jan 2023

அவனியாபுரத்தை சேர்ந்த சூர்யா என்ற 9வயது சிறுவன் அவிழ்த்த காளை மாடுபிடி வீரர்களை சவால்விடுத்து வெற்றிபெற்றது

அவனியாபுரத்தை சேர்ந்த சூர்யா என்ற 9வயது சிறுவன் அவிழ்த்த காளை மாடுபிடி வீரர்களை சவால்விடுத்து வெற்றிபெற்றது

09:46 AM (IST)  •  15 Jan 2023

Pongal Festival 2023: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2 ஆம் சுற்று நிறைவு - ஒரே சுற்றில் 9 காளைகளை பிடித்த வீரர்..!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2 ஆம் சுற்று நிறைவு - இதுவரை 11 காளைகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே சுற்றில் 9 காளைகளை அடக்கி 2 சுற்று முடிவுகளில் மாடுபிடி வீரர் கார்த்தி முதலிடத்தில் உள்ளார் .

09:40 AM (IST)  •  15 Jan 2023

Pongal Festival 2023: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 38 காளைகள் தகுதி நீக்கம்.!!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்த காளைகளில் உரிய ஆவணங்கள் இல்லாததால் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதையின் போது 38 காளைகள் தற்போது வரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கால்நடை துறை தரப்பில் தகவல்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget