மேலும் அறிய

Ramadoss: இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிட முடிவு செய்யப்படும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காததால் இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படுமெனவும் இதற்கான தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் தொடர்ந்து சமூக நீதி குறித்து விடாமல் பேசி வருவது பாமக தான் என்றும் சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக திருத்தி அமைக்க வேண்டும் என கூறினார். 

நான்காவது கட்டமாக தேர்தல் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநானயக கூட்டணி வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பாமக வலியுறுத்தி வருகிற நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டுமென தமிழக அரசு தெரிவிப்பதாக குற்றஞ்சாட்டினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு பீகார் ஆந்திரா, கந்நாடகாவில் நடத்தப்பட்டு தெலுங்கானாவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் இடஒதுக்கீடு தமிழக அரசு வழங்கவில்லை என்றும் அன்புமணி ராமதாஸ் ஜிகே மணி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காததால் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்தப்படுமெனவும் இதற்கு தேதி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிட முடிவு செய்யப்படுமெனவும் மேகதாதுவில் அனைகட்டுவோம் என அம்மாநில அரசு கூறுவது கண்டிக்கதக்கது என்றும் அனைகட்டுவதுதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும் ஆனால் அமைதி காத்து வருவதாக குற்றஞ்சாட்டினார். கர்நாடாகா தண்ணீர் தராத நிலையில் குறுவை சாகுபடி செய்ய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் மாற்று சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசு 8 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் நனைந்தது குறித்து அதிகாரிகள் மீது விசாரனை செய்ய வேண்டும் எனவும் அனைத்து நெல் ஒழுங்கு விற்பனை கூடத்தில் 10 ஆயிரம் மூட்டைகள் வைக்கும் அளவிற்கு குடோன் அமைக்க வேண்டும்.

திருவாரூர், திருவள்ளுவர், விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுகிறது. தனிநபர் வருமானம் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் குறைந்து உள்ளது பல வருடங்களாக உள்ளது. அதனால் இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைத்து தனிநபர் வருமானத்தை பெருக்கலாம் ஆனால் இதனை அதிமுகவும், திமுகவும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார். மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டுமெனவும், அரிமாசங்கம், வனத்துறை இணைந்து மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்றவேண்டும்.

தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாளாரமாக கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு நினைத்தால் ஒருவாரத்தில் கட்டுபடுத்தலாம் காவல் துறைக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவிலிருந்து கஞ்சா வருவதால் ஆந்திராவிற்கே சென்று கஞ்சா தோட்டங்களை போலீசார் அழிக்கலாம் அதனை செய்யவில்லை என கூறினார். தமிழகத்தில் வெப்பத்தினால் இதுவரைக்கும் மூன்று நான்கு பேர் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மின் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கவேண்டும் எனவும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழப்பில் காவல் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இஸ்ஸாமியர்களுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்ஸாமியர்களுக்கு எதிராக மோடி பேசுவதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த பாமக ராமதாஸ் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள் அப்படி தான் மோடி பேசுகிறார் என குறிப்பிட்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Champions Trophy: ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. ஆப்கானை துரத்தும் பேட் லக்!
ஆப்கானை துரத்தும் பேட் லக்.. ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Champions Trophy: ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. ஆப்கானை துரத்தும் பேட் லக்!
ஆப்கானை துரத்தும் பேட் லக்.. ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Seeman:
"திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?" பேட்டியால் கெட்ட சீமான்
"நாட்டை விட்டு வெளியேத்துங்க" டிரம்ப் ஸ்டைலில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குறி வைத்த அமித் ஷா
Seeman: விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
Embed widget