மேலும் அறிய

PM Modi Rameswaram: ராமேஸ்வரம் அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி - தீர்த்த கலசத்துடன் டெல்லி திரும்புகிறார்

PM ModI Rameshwaram: தமிழ்நாட்டில் தனது 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இருந்து இன்று டெல்லி திரும்புகிறார்.

PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்த கலசங்களை எடுத்துக் கொண்டு, பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் மோடி தமிழகம் வருகை:

தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்று மாலை சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தனது பயணத்தின் இறுதி அங்கமாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், புன்னிய தீர்த்தங்களில் குளித்து அங்குள்ள ரங்கநாத சுவாமி ஆலயத்தில் இறைவழிபாடு நடத்தினார். தொடர்ந்து இன்றும் அவர் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளார்.

பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயண திட்டம்:

  • நேற்றைய வழிபாட்டை தொடர்ந்து நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்
  • இதையடுத்து இன்று காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடுகிறார் 
  • அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
  • இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.

டெல்லி சென்றடையும் பிரதமர் மோடி நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தீர்த்த கலசங்களை கொண்டு சேர்க்கிறார். தொடர்ந்து, குழந்தை ராமர் சிலையை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்து, ஆரத்தி வழங்க உள்ளார். இதற்காக 11 நாட்களுக்கான சிறப்பு விரதத்தை பிரதமர் மோடி கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது,

கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:

பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

  • இன்று நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
  • ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
  • 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
  • ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
  • ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget