மேலும் அறிய

Velunachiyaar: அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை: ஒரே லைனில் நிக்கும் பிரதமர் மோடி, விஜய்

Velunachiyaar, Veerapandiya Kattabomman: வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளான இன்று, பிரதமர் மோடி , முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு, சிவகங்கையை மீட்ட  வீரமங்கை வேலுநாச்சியரின் 295-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  அதேபோல், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட  தமிழ் மன்னர்களில் ஒருவரான, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நிலையில் அவரது பிறந்த தினத்தை ஒட்டி அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் , அவர்களது உருவபடத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். 

பிரதமர் மோடி:

பிரதமர் மோடி தெரிவித்ததாவது , “ வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நினைவுகூர்ந்துள்ளார். காலனி ஆட்சிக்கு எதிரான வீரமிகு போராட்டத்தை அவர் நடத்தினார் என்றும், ஈடுஇணையற்ற  துணிச்சலையும், போர்த்திறன் நுண்ணறிவையும் வெளிப்படுத்தினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;

“வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன். காலனி ஆட்சிக்கு எதிரான வீரமிகு போராட்டத்தை நடத்திய அவர், ஈடுஇணையற்ற  துணிச்சலையும், போர்த்திறன் நுண்ணறிவையும் வெளிப்படுத்தினார். ஒடுக்குமுறைக்கு எதிராக துணிந்து நிற்கவும் விடுதலைக்காக போராடவும் பல தலைமுறையினருக்கும் அவர் உந்துசக்தியாக  விளங்கினார். மகளிருக்கு அதிகாரமளித்தலுக்கான அவரின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது”. என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

 முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது ,” 

ஆதிக்கத்துக்கு அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை எனத் தாய்நாட்டின் விடுதலைக்காக வெகுண்டெழுந்த தீரச்சுடர்களாம் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் புகழ் வாழ்க! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்:

அதிமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது , “ ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர்க்களம் கண்ட முதல் பெண் அரசி, வீரத்தின் அடையாளமாகக் காலம் உள்ளவரை மங்காப்புகழுடன் திகழும் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் தீரத்தையும் பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்.

தெற்குச் சீமையில் தாய் மண்ணைக் காப்பதற்காக, ஏகாதிபத்திய ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து போரிட்டு, உயிரை துச்சமெனத் துறந்து, தியாகம் செய்து, வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் வீரபாண்டியகட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும், உன்னத தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். 

Also Read; Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு

தவெக தலைவர் விஜய்:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்ததாவது ,”  ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget