மேலும் அறிய

Pamban Bridge: எழுதப்படும் புதிய வரலாறு.. பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி - எப்போ தெரியுமா?

Pamban Bridge Inauguration: ஏப்ரல் 6-ஆம் தேதி ராமநவமி அன்று பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.

பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோயிலில் தரிசனம் செய்கிறார்.

புதிய பாம்பன் ரயில் பாலம்  

ராமேஸ்வரத்தில் கடலுக்கு மேலே ரூ. 550 கோடி செலவில் 2.05 கிலோமீட்டர் நீளமுள்ள, புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலப்பகுதிக்கும், ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடலைக் வெறும் 5 நிமிடங்களில் கடக்க இந்த பாலம் வழிவகை செய்கிறது. இது பழைய பாலத்தில் கடக்க எடுத்துக்கொள்ளப்பட்ட, 25-30 நிமிடங்களை விட மிகவும் குறைவாகும். புதிய பாலத்தில் சோதனைகள் நிறைவடைந்து, பாதுகாப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, திறப்பு விழாவிற்கே தயாராகி விட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்திரி புதிய பாலத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டி, பாதுகாப்பு குறித்த யோசனைகளையும் வழங்கினார். இதனால் சரி செய்ய கால தாமதம் ஏற்பட்டு பாலம் திறப்பு குறித்த தேதி தள்ளிப் போனது. இந்நிலையில் தான் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொய்வுக்கு காரணம்

 புதிய பாலத்தின் கட்டுமானத்தில் எஃகு வலுவூட்டல், கூட்டு ஸ்லீப்பர்கள் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட ஓவிய அமைப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை ரயில்வே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2019 நவம்பரில் புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார், மேலும் 2020 பிப்ரவரியில் RVNL இன் கீழ் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆரம்பத்தில் இது டிசம்பர் 2021 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலம் திறப்பு தாமதம் ஏன்?  

புதிய பாம்பன் பாலம் ஆசியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலம் என போற்றப்படுகிறது. எனவே இதனை மிகப்பெரும் கனவு திட்டமாக மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில் 6 -ஆம் தேதி பாம்பன் புதிய ரெயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாமூத்ததலைவர்கள், என பலரும்கலந்து கொள்வார்கள்என எதிர்பாக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே முழு வீச்சில் செய்து வருகிறது.

பிரதமர் சாமிதரிசனம்
 
பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். அதன் பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பிரதமர்மோடி உரையாற்றுகிறார். இது தமிழக சட்டப் மன்ற தேர்தல் பிரசாரத்துக்கான அச்சாரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget