மேலும் அறிய

Northeast Monsoon: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

North East Monsoon in Tamil Nadu 2025 : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது, தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 முதல் 18க்குள் விலகும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் அதிக மழைப்பெய்யும் காலமான வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 15-18-க்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது, தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 முதல் 18க்குள் விலகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கு வழிவகை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

இயல்பை விட அதிகம்

தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் இயல்பாக 33 செ.மீ. மழை பெய்ய வேண்டும்.இந்த ஆண்டும் அதனை ஒட்டிய அளவிலேயே மழை பெய்துள்ளதாக அவர் கூறினார்.

சென்னையைப் பொறுத்தவரை, இயல்பாக 45 செ.மீ. மழை கிடைக்க வேண்டிய நிலையில், இதுவரை 58 செ.மீ. மழை பதிவாகியுள்ளது — இது இயல்பை விட 29 சதவீதம் அதிகம் எனவும் அமுதா தெரிவித்தார்.

காற்றின் திசை மாற்றம் – பருவமழை துவக்கத்திற்கு அறிகுறி

வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் தற்போது மேற்கு திசை காற்று வீசுகிறது.அந்த காற்று விரைவில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வீசத் துவங்கும் போது,தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16–18க்குள் துவங்கும் வாய்ப்பு உறுதியாகும் என அவர் கூறினார்.

வழக்கமாக அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது.கடந்த 15 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்திலேயே பருவமழை துவங்கியுள்ளதாகவும்,அதிகமான ஆண்டுகளில் இயல்பை விட அதிக மழை பதிவாகியுள்ளதாகவும்,இரண்டு ஆண்டுகளில் தான் குறைவான மழை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வட மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு

இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை மையம் கணித்துள்ளபடி,வட மாவட்டங்களில் இயல்பாகவும் அல்லது இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.தென் மாவட்டங்களில் இயல்பாக அல்லது சற்றே குறைவாக மழை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 92 நாட்கள் கொண்ட பருவமழை காலத்தில்
இயல்பாக 44 செ.மீ. மழை பதிவாகும்.ஆனால், இந்த ஆண்டில் இயல்பை விட அதிகமாக, அதிகபட்சம் 50 செ.மீ. வரை மழை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1 முதல் இதுவரை தமிழகத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.இந்த மாதம் முழுவதும் 17 செ.மீ. மழை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar ‘INDIA‘ CM Candidate: பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
IND Vs Aus 2nd ODI: சொதப்பிய கோலி, கலக்கிய ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் - ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு
IND Vs Aus 2nd ODI: சொதப்பிய கோலி, கலக்கிய ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் - ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு
Pakistani Taliban: ”ஆம்பளையா இருந்தா வாடா” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தாலிபன்கள் சவால் - ரூ.10 கோடி பரிசு
Pakistani Taliban: ”ஆம்பளையா இருந்தா வாடா” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தாலிபன்கள் சவால் - ரூ.10 கோடி பரிசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Child dies in rainwater | தேங்கி நின்ற மழைநீர்! மூழ்கி உயிரிழந்த குழந்தை! கையில் DRESS. கதறி அழுத தாய்
தாமதமாகும் DGP நியமனம்! மத்திய அரசு கொடுத்த LIST! கடுப்பான தமிழக அரசு
சித்தராமையாவுக்கு ENDCARD! முதல்வராகும் DK சிவக்குமார்? சித்தராமையா மகன் பகீர்
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் வரலாறு படைத்த சனே டகாய்ச்சி காத்திருக்கும் சவால்கள்..! | Japan New PM Sanae Takaichi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar ‘INDIA‘ CM Candidate: பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தல்; இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
IND Vs Aus 2nd ODI: சொதப்பிய கோலி, கலக்கிய ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் - ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு
IND Vs Aus 2nd ODI: சொதப்பிய கோலி, கலக்கிய ரோகித், ஸ்ரேயாஸ், அக்சர் - ஆஸி.,க்கு 265 ரன்கள் இலக்கு
Pakistani Taliban: ”ஆம்பளையா இருந்தா வாடா” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தாலிபன்கள் சவால் - ரூ.10 கோடி பரிசு
Pakistani Taliban: ”ஆம்பளையா இருந்தா வாடா” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தாலிபன்கள் சவால் - ரூ.10 கோடி பரிசு
Rohit Sharma: கவிழ்த்த கிங்.. முதல் ஆளாக மாஸ் காட்டிய ஹிட்மேன் - தெ.ஆப்., ரோகித் டிக்கெட் கன்ஃபார்ம்
Rohit Sharma: கவிழ்த்த கிங்.. முதல் ஆளாக மாஸ் காட்டிய ஹிட்மேன் - தெ.ஆப்., ரோகித் டிக்கெட் கன்ஃபார்ம்
Russia Nuclear Drill: ரஷ்யா-உக்ரைன் போர்; எகிறும் பதற்றம்; புதின் மேற்பார்வையில் நடந்த அணு ஆயுதப் படைகளின் ஒத்திகை
ரஷ்யா-உக்ரைன் போர்; எகிறும் பதற்றம்; புதின் மேற்பார்வையில் நடந்த அணு ஆயுதப் படைகளின் ஒத்திகை
Virat Kohli: எல்லாம் முடிந்ததா..! நாலே பால் தான், நடையை கட்டிய விராட் கோலி - மீண்டும் டக் அவுட்.. ரசிகர்களுக்கு நன்றி
Virat Kohli: எல்லாம் முடிந்ததா..! நாலே பால் தான், நடையை கட்டிய விராட் கோலி - மீண்டும் டக் அவுட்.. ரசிகர்களுக்கு நன்றி
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. செங்கல்பட்டு-அரக்கோணம் இடையே புதிய ரயில் பாதை..முக்கிய நன்மை என்ன?
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. செங்கல்பட்டு-அரக்கோணம் இடையே புதிய ரயில் பாதை..முக்கிய நன்மை என்ன?
Embed widget