TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 9 முதல் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் இடி மின்னல் உடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் பதிவான மழையளவு [மி. மீ] pic.twitter.com/ugpFSTXr19
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 9, 2022
தமிழகம், புதுச்சேரியில் காரைக்கால் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 9, 2022
சென்னையை பொறுத்தவரை;
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39.40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29.30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 9, 2022
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
09.06.2022 ,10.06.2022 11.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.06.2022 13.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
திருப்பத்தூர் (சிவகங்கை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 4. பொன்னமராவதி (புதுக்கோட்டை) 3, தேவாலா (நீலகிரி), எமராலட் (நீலகிரி), செறுமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), காரியாபட்டி (விருதுநகர்) தலா 2, கூடலூர் பஜார் (நிலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்), கேத்தாண்டபட்டி (திருப்பத்தூர்) தலா 1,
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
09.06.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.06.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், கர்நாடக கடலோரப்பகுதி பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.06.202212.06.2022.13.06.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், வட கேரளா - கர்நாடக கடலோரப்பகுதி மற்றும் இலட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
09/06/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/TqPolztvn5
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 9, 2022
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்