New Year Kolam 2026: புத்தாண்டு கோலங்கள்: எளிதில் போட்டு அசத்துங்க- ஸ்டெட் பை ஸ்டெப் ஈஸி டிப்ஸ்!
New Year Kolam 2026: புத்தாண்டை ஃப்ரெஷ்ஷாக வரவேற்கலாம்; இதோ புத்தம்புது ஈஸி கோலங்கள்- ஸ்டெட் பை ஸ்டெப்பாக!

2026-ம் ஆண்டு பிறக்கப்போகும் வேளையில், அதை நம் இல்லங்களில் மகிழ்ச்சியும் மங்கலமும் பொங்க வரவேற்பது சிறப்பாக இருக்கும். தமிழர்களின் கலாச்சாரத்தில் கோலம் என்பது வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வகையிலும் இடப்படுகிறது.
புத்தாண்டின் அதிகாலையில் வாசல் தெளித்துக் கோலமிடுவது, அந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வில் ஒளிமயமான மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கான ஒரு அடையாளமாகும்.
இன்றைய பரபரப்பான சூழலில், பல மணி நேரம் செலவிடாமல் மிக எளிமையாகவும் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையிலும் பல நவீன கோலங்கள் பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக, புள்ளிகள் வைக்கத் தெரியாதவர்கள் கூட எளிதாகப் போடும் வகையில் ஃப்ரீ ஹேண்ட் பூக்கோலங்கள் மற்றும் சிறிய புள்ளிகளைக் கொண்ட ஜியோமெட்ரிக் வடிவங்கள் இந்த ஆண்டின் டிரெண்டாக உள்ளன. இவற்றுடன் ஜிகினா பொடிகள் மற்றும் பலவண்ண ரங்கோலி பொடிகளைச் சேர்க்கும்போது, உங்கள் வீட்டு வாசல் ஒரு கலைக்கூடமாகவே மாறிவிடும்.
இந்த ஈஸி கோலங்களை வரைவதற்கு முதலில் தரையைச் சுத்தப்படுத்தி, அடிப்படைப் புள்ளிகளை (உதாரணமாக 5-3 நேர்புள்ளி அல்லது இடுக்குப்புள்ளி) வைக்க வேண்டும். பிறகு ஸ்டெப்-பை-ஸ்டெப்பாக அந்தப் புள்ளிகளை இணைத்து இதழ் போன்ற வடிவங்களை உருவாக்கி, நடுவில் 'Happy New Year 2026' என வண்ணப்பொடிகளால் எழுதலாம்.
கோலத்தின் ஓரங்களில் காவி, நீலம் தீட்டுவது அதற்கு ஒரு பாரம்பரிய அழகைத் தரும். இந்த எளிய மற்றும் அழகான கோலங்களுடன், உங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை உற்சாகமாகவும் வண்ணமயமாகவும் தொடங்குங்கள்!
இந்தப் புத்தாண்டை இன்னும் ஸ்பெஷலாக மாற்ற, அதிக நேரம் செலவிடாமல், அழகாகப் போடக்கூடிய பிரத்யேகக் கோலங்கள் இதோ உங்களுக்காக.

இந்த கோலம் எப்படி போடுவது என்று ஒவ்வொரு ஸ்டெப்பாக அறிய https://www.youtube.com/watch?v=2zy3NDI5Nrs என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.

இந்த கோலம் எப்படி போடுவது என்று ஒவ்வொரு ஸ்டெப்பாக அறிய https://www.youtube.com/watch?v=2gfnNNcKKqI என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=SD806ah-yqM
இந்த இணைப்பை க்ளிக் செய்து, மேலே உள்ள கோலத்தை எப்படிப் போடுவது என்று விரிவாக பார்க்கலாம்.

இந்த கோலம் எப்படி போடுவது என்று ஒவ்வொரு ஸ்டெப்பாக அறிய https://www.youtube.com/watch?v=vzjKNfLml0c&t=8s என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=bYEb-_mdB-s
இந்த இணைப்பை க்ளிக் செய்து, மேலே உள்ள கோலத்தை எப்படிப் போடுவது என்று விரிவாக பார்க்கலாம்.
ஆல் தி பெஸ்ட்!






















