மேலும் அறிய

நீட் தேர்வு: சேலத்தில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை: நிலத்தை விற்று நிற்கதியாய் நிற்கும் பெற்றோர்!

தங்கள் மகனின் மருத்துவர் கனவை நிறைவேற்றுவதற்காக தங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று படிக்க வைத்துள்ளனர். இப்போது மகனும் இல்லை... நிலமும் இல்லை...!

சேலம் அருகே தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட்தேர்வு எழுதி தோல்வியடைந்ததால் விஷம் அருந்திய மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு: சேலத்தில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை: நிலத்தை விற்று நிற்கதியாய் நிற்கும் பெற்றோர்!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள் கணேசன்-தனலட்சுமி தம்பதியின் மகன் சுபாஷ் சந்திர போஸ். ஏழ்மையான சூழலில் வளர்ந்த மாணவன் சுபாஷ்சந்திரபோஸ், மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்த சுபாஷ் சந்திரபோஸ், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து வந்துள்ளார்.முதல் முறை நீட்தேர்வில் 158 மதிப்பெண்களும், நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 261 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். தொடர்ந்து இரண்டு முறையும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத காரணத்தால் கடந்த ஒன்றாம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் மகனை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

நீட் தேர்வு: சேலத்தில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை: நிலத்தை விற்று நிற்கதியாய் நிற்கும் பெற்றோர்!

சுபாஷின் தந்தை கணேசன் கூறுகையில், ‛‛மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த என் மகன் நீட் தேர்வு தோல்வியால் எங்களை விட்டு பிரிந்த துயரம் தாங்க முடியாமல் தவித்து நிற்கிறோம்,’’ என்றார்.  சுபாஷ் சந்திர போஸின் பெற்றோர், சிறு வயதிலிருந்தே நன்றாக படிக்கும் தங்கள் மகனின் மருத்துவர் கனவை நிறைவேற்றுவதற்காக தங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று படிக்க வைத்ததாக கூறும் கணேசன்,  தற்பொழுது தங்களுக்கு இருந்த சொத்தையும் இழந்து பெற்ற மகனையும் இழந்து தவித்து நிற்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். இனி எவருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று கூறிய அவர் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சுபாஷ் பத்தாம் வகுப்பில் 480 மதிப்பெண் பெற்றதால்தான் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதால் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி வந்தார் என்று கூறினார். மேலும், அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வருமாறு சுபாஷின் தந்தை கணேசன் கூறினார். ஏற்கனவே, நீட் தேர்வு எழுத பயந்து சேலம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்த நிலையில் சேலத்தில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Embed widget