மேலும் அறிய

Thirumavalavan Speech : ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடு - திருமாவளவன் எம்.பி. கடும் கண்டனம்..!

18 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது என ஒரு நீதி அரசரே பட்டியலிட்டு இருக்கிறார் என்று திருமாவளவன் எம்.பி. பேசியுள்ளார்.

’வாழும் வரைக்கும் வள்ளுவம்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் முன்னதாக நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தொல்.திருமாவளவன் பேசியவை பின்வருமாறு:

வள்ளுவம் தமிழினத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே பொதுவானது , அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. மனிதகுலம் வாழும் வரை வள்ளுவம் வாழும்.

காலத்தால் வழிபடும் மதத்தை கூட மாற்றிக்கொள்வோம். ஆனால், வள்ளுவத்தை மாற்ற முடியாது. பெரியாருக்கு சில பேர் பூணூல் போட்டு பார்க்கிறார்கள், சில பேர் காவி உடுத்தி பார்க்கிறார்கள். பெரியார் காவியை விரும்பி இருந்தால் சங்கராச்சாரியார்களுக்கு இடம் இருந்திருக்காது.

தீவிர ஆன்மிக குடும்ப பின்னணியில் பிறந்து, சாதி, மதம் இல்லை என்று சொன்னவர் பெரியார். உழைக்கும் மக்களின் குரலாக மாறி, அவர்களின் விடுதலைக்கு போராடியவர் பெரியார்.

வள்ளுவமும் பெரியாரின் கொள்கைகளும் ஒன்று

ஈரோட்டில் பிறந்த வள்ளுவர் தந்தை பெரியார், வள்ளுவமும் பெரியாரின் கொள்கைகளும் ஒன்று தான். பெரியார் பிறந்த இந்த மண்ணில் ஜெய்ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா?

மதத்தின் பெயரால் தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றிட வித்திடுகிறார்களே, அதை நாம் அனுமதிக்க போகிறோமா?

ஆர்.எஸ்.எஸ். பேரணி மூலம் சமூகநீதியை பாதுகாக்க போகிறார்களா? ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம்.

ஆர்.எஸ்.எஸ் ஃபாசிச இயக்கம்

புதுச்சேரியில் மூன்று அமைச்சர்கள் அரைக்கால் சட்டை போட்டு ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கலந்து கொள்வது எவ்வளவு வெட்க கேடானது. ஆர்.எஸ்.எஸ். சராசரி ஜனநாயக இயக்கம் இல்லை, அவர்கள் பாசிச இயக்கம்.

மக்களின் அத்திவாசிய பிரச்சனைக்காக RSS பேரணி நடத்தவில்லை, மதவாத கருத்துகளை இளைஞர்களிடம் புகுத்தி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தான் இந்த பேரணியை நடத்த துடிக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு 18 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பு உள்ளது. தீவிர அமைப்பு தொடர்பு உள்ளது என  பாப்புலர் பிராண்ட் அப் இந்திய என்ற அமைப்பை தடை செய்த ஒன்றிய அரசு, 18 குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்யவில்லை.

இது போன்ற பேரணிக்கு நாம் ஆதரித்தால் அடுத்த 10 ஆண்டுக்கு பிறகு நாம் கருப்பு, நீலம், சிவப்பு சட்டை அணிய முடியாது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு கருத்தால் முற்போக்கானது.

11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் நாம் காட்டுகிற ஒற்றுமையை பார்த்து அவர்கள் வாலை சுருட்டிக் கொண்டு ஓட வேண்டும். திராவிட இயக்கத்தின் பாசறை தளபதி தான் தி.மு.க.வில் இருக்கிறார் அவருக்கு பெயர் ஆ.ராசா. எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்க்கொள்ளக்கூடிய துணிச்சல் கொண்ட முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கலவையாக நமது முதலமைச்சர் இருக்கிறார். விஜயகாந்த் தே.மு.தி.க. எதிர்கட்சியாக உருவான போது தி.மு.க. என்ற கட்சி இல்லை என்று சொன்னவர் மத்தியில், அடுத்த தேர்தலில் 30 தொகுதி வித்தியாசத்தில் எதிர்கட்சியாக அமர்ந்து தி.மு.க. அடுத்த தேர்தலில் எதிர்கட்சியே இல்லை என்று பெருவாரியான வெற்றி பெற செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்.

காங்கிரஸ், இடதுசாரி அமைப்புகளை ஒன்றிணைத்து சந்தித்த தேர்தலில் எல்லாம் வெற்றி பெற்றவர் மு.க.ஸ்டாலின். சமூக நீதிக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை முதலமைச்சர் பார்த்து கொண்டு இருக்கிறார், எரிமலை பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது தெரியும் , அது வெடிக்கும் போது தான் அதன் தீவிரம் தெரியும்." இவ்வாறு அவர் பேசினார். 

தமிழ்நாட்டில் நேற்று (அக்.2) ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு  அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற அணிவகுப்பில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

ஜோதி வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த தினம் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம்,  குடிமைபொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், பாஜக மாநில தலைவர் சாமிநாதன், நியமன சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு, பாஜக ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து பங்கேற்றனர். 

 

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு, பேரணிக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக்கோரியும் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் புதுச்சேரி அமைச்சர்களின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து முன்னதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: Crime: மேஸ்திரியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்... உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொலை

Skytrax World Airline Awards 2022 : கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஏர்லைன்ஸ் பட்டியல் ! முதலிடத்தை பிடித்த ‘கத்தார் ஏர்லைன்ஸ்’!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
PM Modi: இந்த இணையதளத்தை பாருங்க.! முக்கியமாக குழந்தைகளே, மாணவர்களே , இளைஞர்களே - பிரதமர் மோடி
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
Embed widget