முதல்வன் திரைப்படம் போல மக்களின் பிரச்னையை தீர்த்த எம்.பி.கதிர் ஆனந்த்!
பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்ட எம்.பி. கதிர் ஆனந்த் செயல் பொது மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களின் நலனுக்காக வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தவிட்ட எம்.பி. கதிர் ஆனந்தின் செயலை பொதுமக்களின் பாரட்டுக்களை பெற்றுள்ளது.
பேருந்து நிறுத்தம்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் பகுதியில் உள்ளது மேட்டுப்பாளையம் கிராம். இங்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்றும் அதை அமைத்து தர கோரியும் உள்ளூர் மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேட்டுப்பாளையம் கிராமம் வேலூர் நாடாளுமன்ற தொகுதி. அப்பகுதியின் எம்.பி. கதிர் ஆனந்திடமும் பேருந்து நிறுத்தம் வேண்டும் என்பது குறித்து கோரிக்கை வைத்தனர்.
எம்.பி. தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் பேருந்து நிலையம் கட்டுவதற்கு முடிவானது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு கதிர் ஆனந்த் இன்று (18.02.2024) நேரில் சென்றிருந்தார்.
அப்போது பொது மக்கள் எம்.பி.-யிடம் கோரிக்கை விடுத்தனர். ”இந்தப் பகுதியில் பேருந்து நிலையம் அமைய இருப்பதால் வீடுகளை காலி செய்ய சொல்கின்றனர். பேருந்து நிறுத்தம் காட்டுவதாக அதிகாரிகள் வீடுகளை காலிசெய்ய சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? எங்கு செல்வது? ரொம்ப காலமாக இங்குதான் வசித்து வருகிறோம். இதற்கு நீங்க தீர்வு காண வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்தனர்.
தீர்த்து வைத்த எம்.பி:
இது தொடர்பாக எம்.பி கதிர், "மக்களுக்கான தேவையை தான் செய்ய உங்களின் தொகுதி எம்.பி-யாக நான் பணியாற்றுகிறேன். உங்களுக்கு வேண்டாம் என்றால் விட்டுவிடலாம்" என்று கூறி அப்போதே வட்டாட்சியருக்கு எம்.பி. கதிர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
தங்களின் பகுதியின் வளர்ச்சிக்காக என்று முக்கிய முடிவை எடுத்த மக்கள், எம்.பி கதிர் ஆனந்திடம் நிலம் கொடுப்பதாக தெரிவித்தனர். "பேருந்து நிறுத்தத்திற்கு மட்டும் தேவையான இடத்தை எடுத்துக்கொள்ளலாம், பிற இடங்களில் இருந்து ஒரு செங்கல் கூட எடுக்கக்கூடாது" என எம்.பி. கதிர் ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக தாசில்தார், நில அளவையாளர் ஆகியோர் சாலையில் பிற இடங்களையும் அளந்து மக்களின் வீடுகளையும் காலி செய்ய கூறி இருக்கின்றனர். வீடுகளை காலி செய்வதற்கு தீர்வு அளிக்க வேண்டும் என்று எம்.பி. கதிர் ஆனந்திடம் கோரிக்கை வைத்ததும், அவர் அதிகாரிகளுடன் பேசி உடனடியாக தீர்வு காண நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வன் பட பாணி:
இந்நிகழ்வில் திமுக எம்.பி கதிர் ஆனந்தின் செயலுக்கு அப்பகுதி மக்கள் மனதார நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர். இதே பலரும் பாராட்டி வருகின்றனர். முதல்வன் திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் ஒரே போன் காலில் மக்களின் குறைகளை தெரிந்து அதனை தீர்த்து வைத்திருப்பார். அதே போலவே இது இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.