மேலும் அறிய

Pudukkottai constituency :‘புதுக்கோட்டை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி’ ரேஸில் முந்துவது யார்..?

’முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றுள்ள நற்பெயர், துணை முதலமைச்சர் உதயநிதியிடம் இருக்கும் நெருக்கம், தொகுதி செயல்பாடுகளின் பாசிட்டிவ் ரிசல்ட் ஆகியவை முத்துராஜாவிற்கு சாதகமாக உள்ளன’

தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படவிருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே தீயாய் பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது.Pudukkottai constituency :‘புதுக்கோட்டை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி’ ரேஸில் முந்துவது யார்..?

புதுக்கோட்டை தொகுதி யாருக்கு?

குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட தலைநகரான புதுக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக திமுக யாரை நிறுத்தப்போகிறது என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கிறது. 2.24 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இந்த புதுக்கோட்டைத் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ-வாக திமுகவை சேர்ந்த மருத்துவர் முத்துராஜா இருந்துவருகிறார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட தீவிரமாக அவர் காய்நகர்த்தி வருகிறார்.

திமுகவின் புதுக்கோட்டை பலம்

புதுக்கோட்டையைப் பொறுத்தவரை திமுகவுக்குப் பலமான தொகுதியாகவே இருக்கிறது. அதனால் கடந்த 2021 ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமான் அதிமுகவிலிருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த முறை தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரும் செயலாற்றி வருகிறார்.

புதுக்கோட்டையில் திமுக சார்பில் போட்டியிடப்போவது யார் ?

குறிப்பாக,  புதுக்கோட்டை  திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டி புதுக்கோட்டையில் வாய்ப்பு கேட்டு தலைமையை அணுகியிருக்கிறார். ஆனால், மாவட்டச் செயலாளராக இருக்கும் நீங்கள் விராலிமலையில் போட்டியிடவேண்டும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறது கட்சித் தலைமை. அதிமுக சார்பில் அந்த தொகுதியில் பலமாக இருக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பதால், இப்போதே அந்த பகுதியில் கட் அவுட், பேனர் என தன்னை முன்னிலைப்படுத்த தொடங்கியிருக்கிறார்.Pudukkottai constituency :‘புதுக்கோட்டை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி’ ரேஸில் முந்துவது யார்..?

சீட்டிற்காக முயற்சிக்கும் எம்.எம்.அப்துல்லா

மாநிலங்களை உறுப்பினராக இருக்கும் எம்.எம். அப்துல்லாவும் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். ஆனால், புதுக்கோட்டை மாநகர செயலாளர் விவாகரத்தில் அவரின் செயல்பாடுகளால் உட்கட்சியில் வெடித்த சர்ச்சைகள் இன்னும் ஓயாமல் புகைந்துகொண்டிருக்கிறன. அதனால் அப்துல்லாவிற்கு கட்சித் தலைமை சீட் தருமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ முத்துராஜா
புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ முத்துராஜா

ரேசில் முந்தும் முத்துராஜா

அதே நேரத்தில், தற்போதைய புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் டாக்டர் முத்துராஜவும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருநாள்கூட தவறாமல் கலந்துகொண்டதாகப் பேரவையிலேயே பாராட்டப்பட்ட எட்டு சட்டமன்ற உறுப்பினரில் முத்துராஜாவும் ஒருவர என்பதால் முதல்வரின் கவனமும் பாராட்டும் அவருக்கு சாதகமாக இருந்து வருகிறது.

குறிப்பாக, புதுக்கோட்டை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியது, குடிநீர் தட்டுப்பாட்டை போக்கியது, யார் கல்வி உதவி என்று  வந்து கேட்டாலும் தட்டமால் தன் சொந்த நிதியில் இருந்ந்தே செய்து தருவது, நகரில் விடுபட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தை முடிக்க முயற்சி எடுத்தது,  கடந்த 30 வருடமாகப் புதுக்கோட்டை மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியது என புதுக்கோட்டை தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார் முத்துராஜா.Pudukkottai constituency :‘புதுக்கோட்டை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி’ ரேஸில் முந்துவது யார்..?

4 ஆயிரம் பேருக்கு பட்டா ; தானே இறங்கி மருத்துவம் பார்க்கும் டாக்டர்

அதே நேரத்தில் பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் போராடி வந்த 4 குடும்பங்களுக்கு மேல் பட்டா பெற்றுக்கொடுத்திருப்பது அவருக்கு பெரிய மைலேஜாக  இருக்கிறது. இதுமட்டுமின்றி, புதுக்கோட்டையில் மருத்துவ கல்லூரி வந்த பின்னர் முற்றிலுமாக செயல்படாமல் முடங்கிக் கிடந்த டாக்டர் முத்துலெட்சுமி மருத்துவமனையை மீண்டும் செயல்பட வைத்ததன் மூலம் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள். இது தொகுதி எம்.எல்.ஏவான அவருக்கு பெரிய பிளஸ்காக மாறியிருக்கிறது.  கூடவே எம்.எல்.ஏ ஆவதற்கு முன்னர் தான் பார்த்துக்கொண்டிருந்த அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்திருந்தாலும், இப்போதும் மாலையில் தொகுதி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவது என தொகுதி மக்களிடையே தொடர்ந்து இணைப்பில் இருக்கிறார்.Pudukkottai constituency :‘புதுக்கோட்டை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி’ ரேஸில் முந்துவது யார்..?

யாருக்கு சீட்?

இதனடிப்படையில் பார்த்தால், தற்போதைய நிலையில் தொகுதி மக்களிடம் தனக்கென தனியொரு மக்கள் செல்வாக்கை உருவாக்கியிருப்பதால் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவுக்கே மீண்டும் திமுகவில் சீட் உறுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
Madurai ; வைகைப்புயல் வடிவேலு பேசட்டும். அவர் பேச பேச திமுக அழிந்து போகும் - செல்லூர் ராஜு சாபம் !
Madurai ; வைகைப்புயல் வடிவேலு பேசட்டும். அவர் பேச பேச திமுக அழிந்து போகும் - செல்லூர் ராஜு சாபம் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Embed widget