TN Rain Alert: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடித்து வெளுக்குமா மழை? இன்றைய வானிலை நிலவரம்..
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![TN Rain Alert: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடித்து வெளுக்குமா மழை? இன்றைய வானிலை நிலவரம்.. moderate rains to be continued in TN for next four days New pressure forms TN Rain Alert: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடித்து வெளுக்குமா மழை? இன்றைய வானிலை நிலவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/30/e5076c326792f541d89fde17655100061669792857373589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
30.11.2022 மற்றும் 01.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.12.2022 மற்றும் 03.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04.12.2022: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஊத்து (திருநெல்வேலி) 9, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 7, கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), சிவகிரி (தென்காசி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 6, பர்லியார் (நீலகிரி), கீழ் கோதையாறு (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 5, கடம்பூர் (தூத்துக்குடி), பில்லூர் அணை (கோவை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), கயத்தாறு (தூத்துக்குடி), பாபநாசம் (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 3, காயல்பட்டினம் (தூத்துக்குடி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), இராஜபாளையம் (விருதுநகர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சிவகாசி (விருதுநகர்), குன்னூர் PTO (நீலகிரி), ராமநாதபுரம் Agro தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்
தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நவம்பர் 17 முதல் 23 வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக இயல்பை விட பதிவாகியுள்ளது.
இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர் ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)