MK Stalin Health: மேலும் சில நாட்கள் ஓய்வு.. முதல்வர் உடல்நலம் குறித்து மருத்துவமனையின் அறிக்கை!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் நேற்று கோவிட் தொற்று தொடர்பாக தேவையான விசாரணைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். கோவிட் சிகிச்சை நெறிமுறையின்படி விசாரணைகள் முடிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் நலம் பெற்று நலமாக உள்ளார். மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளனர்.
#BREAKING | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை https://t.co/wupaoCQKa2 | #MKStalin #masubramanian #DMK pic.twitter.com/zfcXwIJS9Y
— ABP Nadu (@abpnadu) July 15, 2022
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்ததால் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
வீட்டில் இருந்து கொரோனா கவச உடையுடன் அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்பிவிடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல்நிலை சீராக இருப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்