Minister Thangam Thennarasu : என்.எல்.சி விவகாரம்: என்ன நடக்கிறது? - பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...!
என்எல்சி விவகாரத்திற்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பேரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Minister Thangam Thennarasu : என்எல்சி விவகாரத்திற்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பேரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி நெய்வேலி புவனகிரி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள 37க்கும் மேற்பட்ட கிராமங்களில் என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக விவசாயிகளும், அரசியல் அமைப்புகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு தீர்மானம்
இந்நிலையில், சட்டப் பேரவையில் கடந்த 20ஆம் தேதி நிதிநிலைக்கான பட்ஜெட்டை நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் நேற்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெறுகிறது.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ்., விசிக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசினார். அப்போது, "என்எல்சி நிறுவனத்தில் தற்போது 1,711 காலி பணியிடங்கள விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில் நிலம் அளித்தவர்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயர்மட்ட குழு
அதேபோல, உயர்த்தப்பட்ட இழப்பீட்டைப் பொறுத்தவரையில், ஒரு கட்டத்தில் ரூ.23 இலட்சமாக இருந்த இழப்பீட்டுத் தொகை, பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தற்போது அந்தத் தொகை ரூ.25 இலட்சமாக உயர்த்தப்பட்டு, வழங்கப்படவிருக்கிறது. 2013 ஆம் ஆண்டு வரையில் நிலம் வழங்கியவர்களுக்கு மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையினை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் தற்போது நல்லமுறையில் நடைபெற்று, முடிவுறும் தருவாயில் இருக்கின்றன. அதனடிப்படையில், ரூ.23 இலட்சமாக இருந்த தொகை தற்போது ரூ.25 இலட்சமாக வழங்கும் நிலை உருவாகியிருக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும், வேலைவாய்ப்பை வழங்குவதை உறுதி செய்வதற்கு ஓர் உயர் மட்டக் குழுவினைத் தற்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக 61,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்று கூறுவது தவறானது. தேவைக்கு அதிகமான நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரித்துள்ளார்.
மேலும் படிக்க
Ajith: தந்தையை இழந்து தவிக்கும் அஜித்... தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்