சி.எம்.க்கு வீடியோ கால்! அமைச்சர் பொன்முடி செய்த சம்பவம்! கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
எங்களுக்கு வீடு இல்ல என ஒருவர் புலம்பும் போது பொன்முடி உடனே கடுப்பாகி PHONE-ஐ திருப்பிய சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
விழுப்புரத்தில் மழையால் எந்த பிரச்சனையும், இல்ல எல்லாம் சரியா இருக்கு என அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது எங்களுக்கு வீடு இல்ல என ஒருவர் புலம்பும் போது பொன்முடி உடனே கடுப்பாகி PHONE-ஐ திருப்பிய சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை விழுப்புரத்தையே புரட்டிப் போட்டது. அதிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது மரக்காணம்தான். குடிசை பகுதிகளில் வசித்து வந்த நரிக்குறவர்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து முகாம்களில் தங்க வைத்தனர். மழை குறைந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வீடியோ கால் செய்து வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கம் கொடுத்தார். நரிக்குறவர்கள் அருகில் இருப்பதாக சொல்லி அவர்களிடம் பேச கொடுத்தார் பொன்முடி. பெண் ஒருவர் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, குறுக்கே வந்த ஒருவர் வீடு வாசல் தான் இல்ல ஐயா என்று சொன்னதும் பொன்முடி போனை அவர்களிடம் இருந்து போனை திருப்பினார்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் இதையெல்லாம் சொல்ல வேண்டாம் என சைகை காட்டினர். ஆனால் அந்த நபர் விடாமல் அதையே சொல்லிக் கொண்டிருந்ததால் கடுப்பான அமைச்சர் பொன்முடி சும்மா இருய்யா என கோபமாக பேசினார்.
பின்னர் அந்த நபர் கத்திக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்தில் சிக்கியுள்ளது. மக்களை தங்களுடைய குறைகளை கூட சொல்ல விடாமல் தடுப்பதாக பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.