புற்றுநோயால் ஏற்படும் நாள்பட்ட வலிக்கு சிறந்த சிகிச்சை.. உடனே சென்னை GH-க்கு கிளம்புங்க!
மருந்து, மாத்திரை, ஊசிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத வலிகளுக்கு கதிரியக்க அதிர்வெண் நீக்கம் மூலம் உடம்பில் எந்தவித பாகத்திற்கும் பக்க விளைவுகள் ஏற்படாமல் வலி நிவாரணம் அளிக்க முடியும்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவையை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
நாள்பட்ட வலிக்கு பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை:
பின்பு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "புற்றுநோய் மற்றும் மூட்டு வலியால் வரும் கடுமையான வலிகளுக்கு உரிய நிவாரண சிகிச்சைகள் 2013 ஆம் ஆண்டு முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் செய்யப்பட்டு வருகிறது.
நாள்பட்ட வலி என்பது 3 மாதத்திற்கு தொடர்ச்சியாக நிலையாக ஒரே இடத்தில் இருக்கும் வலி, மேலும் கை, கால்களில் ஏற்படும் வலி, எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வாத நோய், புற்றுநோயால் ஏற்படும் பலவித வலி நோய்களால் அன்றாட வாழ்க்கை முறையில் சோம்பலை ஏற்படுத்தும். தூக்கமின்மையை உண்டாக்கும்.
தற்கொலை போன்ற உணர்வுகளுக்கு பெரிய அழுத்தத்தை உண்டாக்கும். எனவே மருந்து, மாத்திரை, ஊசிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத வலிகளுக்கு கதிரியக்க அதிர்வெண் நீக்கம் மூலம் உடம்பில் எந்தவித பாகத்திற்கும் பக்க விளைவுகள் ஏற்படாமல் வலி நிவாரணம் அளிக்க முடியும்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை:
ஃப்ளோரோஸ்கோபி என்று சொல்லப்படும் மிக நேரம் எக்ஸ்ரே மூலம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த செயல்முறைகளின் மூலம் தினப் பராமரிப்பு நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள்.
மாதத்திற்கு சுமார் 50 முதல் 50 நோயாளிகள் வரை இந்த சிகிச்சைகள் மூலம் பயனடைய முடியும். இந்த சிகிச்சையானது பொதுவாக, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் பெற வேண்டும் என்று சொன்னால், ஒரு நோயாளிக்கு சுமார் ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை செலவாகும்.
ஆனால், இந்தக் கருவிகள் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்கத்துறையில் நாள்பட்ட வலி நிவாரண மையத்தின் மூலம் இந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது" என்றார்.
தொழுநோய் பரிசோதனை தொடர்பான கேள்விக்கு, "தொழுநோய் பொறுத்தவரை விழிப்புணர்வு முகாம் 30.01.2025 முதல் 15.02.2025 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தொழுநோய் பரிசோதனைகள் 13.02.2025 முதல் 28.02.2025 வரை நடைபெறுகிறது.
தொழுநோய் பரிசோதனைகள் 13.02.2025 அன்று மட்டும் 133 வட்டாரங்களிலும், 27 நகரப்பகுதிகளிலும் 3.42.241 வீடுகளில் 10.67,675 பேர் பயன்பெறும் வகையில் பரிசோதனைகள் நடைபெற்றது. தொழுநோய் பரிசோதனைகளுக்கான அறிகுறிகள் இருப்பவர்களிடம் குறிப்பாக தோலில் உணர்ச்சியற்ற, சிவந்த வெளிர்ந்த தேமல், கண்களை மூட இயலாமை, கை விரல்கள் மடக்கி இருத்தல், கை மற்றும் கால்களில் ஆறாத புண்கள் போன்ற பல்வேறு பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களிடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடாக தேடிச் சென்று பரிசோதனைகள் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

