மேலும் அறிய

TN Local Body Elections: செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கே.என் நேரு

செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழ்நாட்டில், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலும், இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும் என அமைச்சர் கே.என் நேரு தகவல் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, மனுத்தாக்கல் முடிந்து, வேட்புமனு பரிசீலனையும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தை காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நிர்வகிப்பதற்கான சட்டவரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு தனி அலுவலர்கள் நியமனம், 6 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது.

TN Local Body Elections: செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கே.என் நேரு

இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில், தமிழகத்தில் நகர்புற பகுதிகளை தவிர்த்து ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் இந்த 9 மாவட்டங்களில் இருக்கும் ஊரக பகுதிகளில் வார்டு மறுவரை முடியாததால் இந்த மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையெடுத்து ஊரகப்பகுதிகளில் மட்டும் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.

TN Local Body Elections: செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கே.என் நேரு

இதனையெடுத்து நகரப்பகுதிகளில் நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலையும் 9 மாவட்டங்களில் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தலையும் மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக இன்று வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

வார்டு மறுவரை முடியாத காரணத்தால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால்,  செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலும், இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும் என அமைச்சர் கே.என் நேரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது உறுதியளித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Delhi Ganesh: தமிழகமே சோகம் - உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
Actor Delhi Ganesh: தமிழகமே சோகம் - உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Delhi Ganesh: தமிழகமே சோகம் - உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
Actor Delhi Ganesh: தமிழகமே சோகம் - உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
Breaking News LIVE: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
Breaking News LIVE: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
Embed widget