மேலும் அறிய

ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்

திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா ? திருமாவளவன் தலைமையில் கூட்டணி அமையும் யாரேனும் சொன்னார்களா - திருமா

விழுப்புரம் மைய மாவட்ட செயலாளர் திலீபன் அவர்களின் தாயார் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில்...,

ஒரு கொடி கம்பம் கூட நடமுடியவில்லை - கொடியேற்றுவதை ஒரு யுத்தமாக எதிர்கொண்டு வருகிறோம் 

இந்த சமூகத்தில் தோற்றம் பெற்று, போராடி தாக்குபிடித்து நின்று இரண்டு தலைமுறைகளை கடந்து பயணிக்க முடிகிறது என்றால் அவ்வளவு எளிதானது அல்ல, எவ்வளவு கடினமானது என்பதை ஒவ்வொருவரும் அறிவோம். ஒரு ஊரிலே ஒரு கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தம், காவல் துறை அனுமதிக்காது, அந்தப் பகுதியில் இருக்கிற இதர அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு, சாதியவாதிகள் கட்டாயமாக அதை எதிர்ப்பார்கள் அவ்வளவு எளிதாக ஒரு கொடியை நம்மால் ஊன்றி விட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடி ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது வழக்குகளை சந்தித்திருக்கிறோம். சிறைச்சாலைக்கு சென்று இருக்கிறோம். அது இன்னும் தொடர்கிறது.

இந்தியாவிலேயே கொடியேற்றுவதை ஒரு யுத்தமாக எதிர்கொண்டு வருகிற இயக்கமாக இருக்கிறது என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். 

இது நமக்கு புதிதல்ல கடலூர் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள், இது அண்மைக்காலமாக மட்டுமல்ல தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கடலூர் அருகே ஏழு முறை கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்தார்கள். வேதனை, காவல்துறையே தடுக்கும். அதனை எல்லாம் கடந்து கொடியை நாம் ஊன்று விட்டால் அதனை எதிர்க்கட்சிகள் எதிர்பார்கள். அப்படிப்பட்ட காலத்திலிருந்து இந்த இயக்கத்தில் இணைந்து போராளிகளாக இணைந்து பயணிக்கிறார்கள். 

'கொடி யுத்தம் என்கிற  பெயரிலேயே  ஒரு புத்தகத்தை தொகுக்கலாம்'

இப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் சந்தித்து வருகிறோம். ஆனால் தொடங்குகிற களத்தில் தொடர்ச்சியாக 20-ஆண்டு காலத்தில் அந்த வாய்ப்புகளை இல்லை, ஆனாலும் என்னை சந்தித்த தோழர்கள் இந்த இயக்கத்தை விட்டு ஒருபோதும் வெளியேறவில்லை. கடுமையான நெருக்கடிகள் எல்லாம் கடந்து பயணித்து வருகிறோம். கொடி யுத்தம் என்கிற  பெயரிலேயே  ஒரு புத்தகத்தை தொகுக்கலாம்.

நம்மை சிறுமைப்படுத்த பார்க்கிறார்கள் - இதுதான் இந்த மண்ணின் உளவியல்

எல்லோரும் நம்மை குறைத்து மதிப்படுகிறார்கள், நம்மை சிறுமைப்படுத்த பார்க்கிறார்கள், நான் அடிக்கடி சொல்லுவேன் எனக்கு பின்னால், பத்தாண்டுகளுக்கு பின்னால் கட்சி தொடங்கினால் கூட பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளிலும் அவர்களை முன்னே சொல்லி என்னை பின்னே செல்வார்கள், அவர் பெயரை முன்னே போட்டு என் பெயரை பின்னால் போடுவார்கள் இதுதான் இந்த மண்ணின் உளவியல் என கூறி இருக்கிறேன். இப்போதும் அது நடக்கிறது. 

நம்மை ஓரங்கட்ட பார்த்தாலும் ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம். நீங்கள் தீர்மானிப்பது மையம் அல்ல நாங்கள் தீர்மானிப்பது தான் மையம்.  இதனை தற்பெருமையாக செல்லவில்லை அந்த அளவிற்கு நாம் களத்தில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். 

திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் - நானாவா சொல்கிறேன்!

ஏன் திரும்பத் திரும்ப திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என கூறுகிறார். ஏ நீ திரும்ப திரும்ப கேள்வி கேட்கிறாய்... நானாவா சொல்கிறேன் நீங்கள் திரும்பத் திரும்ப கேள்வி கேட்பதினால் தான் அந்த பதிலை கூறுகிறேன். 

‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்'

எங்கே சென்றாலும் இறங்கியவுடன் மைக் எடுத்து வருகிறார்கள், சார் நீங்கள் விஜய்யுடன் கூட்டணியா எடப்பாடியுடன் கூட்டணியான கேள்வி கேட்கிறார்கள்... நீ திரும்பத் திரும்ப கேட்கிறாய். நான் திரும்பத் திரும்ப பதில் சொல்கிறேன். 

‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்’ நான் பலமுறை சொல்ல வேண்டிய தேவை எனக்கு என்ன வந்தது... நான் தெளிவாக இருக்கிறேன், நான் உறுதியாக இருக்கிறேன் அதை திரும்பத் திரும்ப நீங்கள் சொல்ல வைக்கிறீர்கள்... நீங்களே ஒரு சந்தேகத்தை கிளப்பி விட்டுட்டு அதை என்னிடம் பதில் கேட்கிறீர்கள்..

நான் தனியாக சென்று திமுகவிடம் டீல் பன்னல

நாம் உருவாக்கிய கூட்டணி, நாம் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி. நாங்க தனியாக திமுகவிடம் சென்று இரண்டு மூன்று சீட்டு கொடுங்கள் என்று கேட்கவில்லை. திமுக விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறோம். அவர்கள் மேஜர் பார்ட் என்றால், நாங்கள் மைனர் பார்ட்டில் இருக்கிறோம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. நான் தனியாக சென்று திமுகவிடம் டீல் பன்னல, காங்கிரஸ் தனியாக சென்று கேட்கவில்லை. 

என்னை  ‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’ என கேட்கிறார்

நாங்கள் இடம் பெற்று இருக்க கூடிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவை விமர்சிக்கும் போது அதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் நான் இந்த கூட்டணியில் எதற்கு நீடிக்கிறேன் என்பதை கேள்விக்குறியாக மாறும். திமுகவிற்காக சொல்லவில்லை அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்காக பதில் சொல்கிறோம். அதனை ஒருவர் ‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’ என கேட்கிறார்.  ஆளுங்கட்சியாக இருக்கிறது ஆறாவது முறையாக ஆட்சி இடத்தில் இருக்கிறது. அந்த கட்சிக்கு முட்டுக் கொடுக்கிற தேவை எங்கிருந்து வந்தது.

ஒரே நேரத்தில் பேரம் பேசி அரசியல் செய்யவில்லை

அறுவெருப்பர்கள் அவ்வாறு அவதூறு பரப்புகிறார்கள். நாங்கள் வளரும் நிலையில் இருக்கிறோம், கொள்கை பிடிப்போடு இருக்கிறோம், ‘அங்கே போனால் வாரலாமா, இங்கே போனால் வாரலாமா என்று ஒரே நேரத்தில் பேரம் பேசி அரசியல் செய்யவில்லை. அது தேவை எங்களுக்கு இல்லை. 

நிர்மலா அவ்வப்போது கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு போவது போல் இல்லாமல்..!

நாம் பேசுகிற அரசியலை புரிந்து கொள்வதற்கு பலருக்கு பத்தாண்டுகள் தேவைப்படலாம்.   மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தை கட்சி பங்கு வகிக்கிறது. இந்தியா கூட்டணி உருவாக்கியதிலும் பங்கு உண்டு. அதனால் தான், நிர்மலா அவ்வப்போது கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு போவது போல் இல்லாமல், கருப்பு வெள்ளையிலே என் மீது நம்பிக்கை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆற அமர படிப்பதற்காக அறிக்கையாக எனது முகநூலில் பதிவு செய்துள்ளேன். 

விடுதலை சிறுத்தை கட்சி  ஒரு அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறுகின்ற கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகள் பரிமாற்றம் நடக்கிறது. விசிக அடையாள அரசியலில் இருந்து மீண்டு எழுந்து நிற்கிறது. அனைத்து தரப்பினரும் ஆதரிக்கக் கூடிய பேரியக்கமாக உள்ளது. 

இது திமுகவுக்கு வக்காலத்து வாங்குவது அல்ல.. இது நமக்கு ஒரு பாடம்

கொள்கை பிடிப்போடு இருந்தால் தான் எத்தனை சதி முயற்சிகள் நடந்தாலும் அதனை முறியடிக்க முடியும் என்பதற்கு திமுக ஒரு சான்று. இது திமுகவுக்கு வக்காலத்து வாங்குவது அல்ல.. இது நமக்கு ஒரு பாடம்... திமுக சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் அரசியல் களத்தில் விவரிக்கவே முடியாது.

ஆனால் நாம் சந்தித்த நெருக்கடிகள் வேறு, அது திமுகவிற்கு கிடையாது. ஆனால் எம்ஜிஆர் திமுக விட்டு வெளியேறிய நேரத்தில் கலைஞருக்கு எதிரான எவ்வளவு அவதூறு பிரச்சாரங்கள்.  தினம் தோறும் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு, எம்ஜிஆர் வெளியேறினார் அவ்வளவுதான். அந்த கட்சி ஒழிந்தது என பேசினார்கள். மிசா நெருக்கடியும், எம்ஜிஆர் வெளியேறியதையும் ஒரே நேரத்தில் சந்தித்த இயக்கம் திமுக.

விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப்

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தப்போது சொன்னார்கள். இந்த கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என கூறினார்கள். இன்றைக்கு விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப். பயங்கரமான ஹைப், 

நம் மாநாட்டிற்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள், இதனை முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தார்களா? சினிமா ஹீரோவாக கூட இல்லை திருமாவளவன் இல்லை, இவரால் எப்படி இத்தனை லட்சம் பேரை கூட்ட முடிந்தது என விவாதித்தார்களா ? மூன்று மணிக்கு வந்தார்கள் நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்தார்கள். இந்தியாவில் இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை என யாராவது சிலாகித்து பேசினார்களா?. ஏழு மணிக்கு மேல கூட்டத் தாங்காதுன்னு எளிமையாக கூட்டத்தை முடித்து விடுகிறார்கள். இது இந்தியா முழுக்க அப்படித்தான் உள்ளது. ஆனால் 12 மணி 1 மணி ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்து கிடக்கின்றனர்.

விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள் விசிக என்ன இன் ஆர்கானிக் மாஸா. காசு கொடுத்தோமா, வண்டிக்கு, பிரியாணி என காசு கொடுத்து கூப்பிடவில்லை அவர்களாக குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் புறப்பட்டு வந்தார்கள். இரண்டு லட்சம் பெண்கள் வந்தார்கள், இதனை யாராவது பேசினார்களா? இதனை விவாதித்தார்களா.

திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா ?

திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா ? திருமாவளவன் தலைமையில் கூட்டணி அமையும் யாரேனும் சொன்னார்களா. நான் சொல்லணும் என்று ஆசைப்படவில்லை, இதுதான் இந்த சமூகம். இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள். ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும். அதனை புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும். 

விடுதலை சிறுத்தைகளுக்கு போட்டியாக வர முடியாது

நான் அடிக்கடி கூறுவேன்... யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு போட்டியாக வர முடியாது, நம் களம் முற்றிலும் வேறானது. இந்த காலத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வர முடியாது. இதை நம்மால் மட்டும் செய்ய முடியும். இப்படி ஒரு இயக்கத்தை நடத்த முடியும்.

சமூக ஊடங்களில் கவனமாக இருக்க வேண்டும்

நாம் இன்னும் விழிப்பாக இருக்க வேண்டும். சமூக ஊடங்களில் கவனமாக இருக்க வேண்டும் எதிர்வினை ஆற்றுகிறோம் என்கின்ற பெயரில் நாம் அவசரப்பட்டு எதையும் செய்து விடக்கூடாது. இன்றைக்கு நேர்மை தரத்தோடு நம்முடைய தோழர்கள் செய்தாலும் தவறு என கண்டித்து மூன்று பேரையும் மூன்று மாதம் இடைநீக்கம் செய்திருக்கிறோம். எந்த தோழர்கள் தவறு செய்தாலும் அது கண்டிக்கத்தக்கது என கண்டிக்கிற நேர்மை விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு உண்டு என இன்று நடைமுறையில் காட்டி இருக்கிறோம். 

நாம் அதிகார பீடத்தை நோக்கி வீர நடை போட வேண்டாம்

மேடைகளில் இனி யாரும் அவ்வாறு பேசக்கூடாது, கவனயீர்ப்புக்காக எதையும் பதிவு செய்யக்கூடாது. கவனயீர்ப்புக்காக எதையும் பேசக்கூடாது நாம் நிதானமாக பயணிக்க வேண்டும். நாம் அதிகார பீடத்தை நோக்கி வீர நடை போட வேண்டாம், நாம் களத்தில் மக்களுக்காக உண்மையாக போராடினால் பீடம நம்மை நோக்கி வரும்., அதிகாரம் நம்மை நோக்கி வரும், அரசியல் நம்மை நோக்கி வரும் என்ற அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் பிரச்சினைகளுக்காக நாம் போராட வேண்டும். இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget