"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" பெண்கள் முன்னேற்றம் குறித்து நிர்மலா சீதாராமன் நறுக்!
ஆணாதிக்கம் என்பது இடதுசாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கான்சப்ட் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண்கள் தாங்கள் விரும்பியதை சாதிக்கவிடாமல் ஆணாதிக்கம் தடுத்தது என்றால், இந்திரா காந்தி எப்படி பிரதமராக ஆனார்? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் CMS வணிகப் பள்ளியில் மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, புதிய கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதற்காக மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் இளைஞர்களுக்கான அரசு திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
"ஆணாதிக்கம் என்பது ஒரு கான்சப்ட்"
பெண்கள் முன்னேற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், "ஆணாதிக்கம் என்பது இடதுசாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருத்து. அருமையான வாசகங்களால் மயங்கிவிடாதீர்கள். நீங்கள் உங்களுக்காக நின்று தர்க்கரீதியாக பேசினால், உங்கள் கனவுகளை அடைவதை ஆணாதிக்கம் தடுக்காது.
பெண்களுக்கு போதிய வசதிகள் இல்லை. மேலும் வசதிகள் தேவைப்படுகின்றன. புதுமைகளை கண்டுபிடிப்பவர்களுக்கான உகந்த சூழலை நரேந்திர மோடி அரசு உருவாக்கி வருகிறது. நாங்கள் கொள்கைகளை வெளியிட்டு, புதிய கண்டுபிடிப்புகளை மட்டும் ஆதரிக்கவில்லை.
இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கான சந்தையை உறுதி செய்ய இந்திய அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. அரசு கொள்முதலில் 40 சதவீதம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் இருந்து வருகிறது.
நிர்மலா சீதாராமன் என்ன பேசினார்?
அதனால்தான் இந்தியாவில் இன்று 2 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்அப்கள் உள்ளன. மேலும், 130க்கும் மேற்பட்டவை யூனிகார்ன்களாக மாறியுள்ளன. வாய்ப்பு மகத்தானது. ஆனால் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.
டிஜிட்டல் நெட்வொர்க்குகளைப் பரப்புவதற்கான இந்தியாவின் அணுகுமுறை அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், பல நாடுகள் தனியார் நிறுவனங்கள் வழியாக வளர்கின்றன. இதன் விளைவாக எங்காவது சில பெயரளவு கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, மைக்ரோ-லெவல் பயனர்கள் கூட டிஜிட்டல் வங்கிக்கு பணம் செலுத்தாமல் அணுகலாம். எனவே, நாம் தேவையற்றவர்களாக மாறாமல் இருக்க தொழில்நுட்பம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும். இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி வழங்கும் 'Fund of Funds', சிறு வணிகங்கள் மற்றும் ஆதரவு தேவைப்படும் புதுமையான யோசனைகளுக்கு உதவும் வகையில் 10,000 கோடி ரூபாயை செலுத்துவதன் மூலம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது" என்றார்.
இதையும் படிக்க: 4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்