மேலும் அறிய

Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயி

குஜராத் மாநிலத்தை சேர்ந்த விவசாயக் குடும்பம், தங்களுடைய லக்கி காருக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் உள்ள பதர்ஷிங்கா கிராமத்தில் நடந்துள்ளது இந்த அதிசய நிகழ்வு. காரின் உரிமையாளர் சஞ்சய் போலாரா மற்றும்  குடும்பத்தினர் 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த தங்களது வேகன் ஆர் காருக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து இறுதிச்சடங்கு செய்துள்ளனர்.. மலர்களால் அலங்கரித்த காரை வீட்டில் இருந்து ஆரவாரத்துடன் ஊர்வலமாக பண்ணைக்கு எடுத்து சென்றுள்ளனர். பண்ணையில் 15 அடி ஆழமான குழி தோண்டி, பச்சை துணியால் மூடப்பட்ட காருக்கு பூசாரிகள் மந்திரங்களை சொல்லி, குடும்ப உறுப்பினர்கள் பூஜை செய்து, ரோஜா இதழ்களை தூவி விடை கொடுத்தனர். இறுதியாக, எக்ஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் களிமண்ணை ஊற்றி காரை புதைத்துள்ளனர்.

இந்த இறுதிச்சடங்கில், மதகுருக்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 பேர் கலந்து கொண்டனர். போலாரா மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுடைய பண்ணையில் காருக்கு இறுதிச்சடங்கு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து விவசாயி போலாரா கூறுகையில், "நான் இந்த காரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன். இது, எங்கள் குடும்பத்திற்கு செழிப்பைக் கொண்டு வந்தது. தொழிலில் வெற்றி கண்டது மட்டுமின்றி எனது குடும்பத்துக்கும் மரியாதை கிடைத்தது.அந்த வாகனம் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்தது. எனவே, அதை விற்பதற்குப் பதிலாக, எனது பண்ணையில் சமாதியைக் காணிக்கையாகக் கொடுத்தேன். இறுதிச்சடங்குக்கு 4 லட்சம் ரூபாய் செலவழித்தேன்.
குடும்பத்தின் அதிர்ஷ்ட கார் குறித்து வருங்கால சந்ததியினருக்கு நினைவூட்டும் வகையில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மரத்தை நட திட்டமிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

ஏழை, எளிய மக்கள், இறுதிச்சடங்கை நடத்துவதற்கு கூட சிரமப்பட்டு வரும் நிலையில், 4 லட்சம் ரூபாய் செலவு செய்து, தங்களுடைய அதிர்ஷ்ட காருக்கு விவசாயி குடும்பம் இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியா வீடியோக்கள்

Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!
Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget