மேலும் அறிய

Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

பெருந்துறை தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பாவதற்கு முன்பே அமைச்சர் முத்துசாமி பேசியுள்ளது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த தொகுதியை திமுகவினருக்கு ஒதுக்க கூடாது என்பதற்காக முத்துசாமியே உள்ளடி வேலைகளை பார்த்து வருவதாக ஈரோடு திமுக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

2026 தேர்தலுக்கான வேலைகளில் திமுக தற்போதே மும்முரமாக இறங்கியுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி பார்வையாளராக டாக்டர் மகேந்திரனை அறிமுகப்படுத்திய அமைச்சர் முத்துசாமி, அதற்கு பிறகு பேசிய விஷயங்கள் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறை தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம், ஆனால் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படலாம். அவ்வாறு ஒதுக்கப்படும் பட்சத்தில் நீங்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

இந்த முறை எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என காத்திருந்த நிர்வாகிகளுக்கு அவரது பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது. 2016ல் திமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.சாமி அதிமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலத்திடம் தோல்வியடைந்தார். 2021ல் இந்த தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே.கே.சி பாலு அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இந்த முறையும் கூட்டணி கட்சிக்கே ஒதுக்கி விடுவார்களோ என திமுகவினர் குழப்பத்தில் இருக்கின்றனர். 

ஆனால் பெருந்துறை தொகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்குவதற்கான வேலையை முத்துசாமி செய்து வருவதாக சொல்கின்றனர். அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முத்துசாமி, அதன்பிறகு கட்சியின் முக்கிய நபர்களை ஓரங்கட்டியதாக பேச்சு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலும் ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேச மூர்த்தியை களமிறக்க பெருமுயற்சி எடுத்தார் முத்துசாமி. ஆனால் திமுக தலைமை அதற்கு மாறாக திமுக சார்பில் பிரகாஷை வேட்பாளராக அறிவித்தது. 

தற்போது பெருந்துறை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என அவர் பேசியதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. 25 ஆண்டு காலத்திற்கு மேலாக அதிமுகவில் பதவி வகித்து, திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதி சீட்டை வாங்கி விடுவாரோ என்ற பயத்தில் தான் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என நினைத்து முத்துசாமி பேசியதாக ஈரோடு திமுகவினர் மத்தியில் பேச்சு இருக்கிறது. 
 
ஈரோடு திமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை தீர்க்க திமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கும் போதே நமக்கு சீட் இல்லை என சொல்வதால் நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் மெத்தனம் காட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதால், உடனடியாக திமுக தலைமை தலையிட வேண்டும் என ஈரோடு திமுக தரப்பில் இருந்து குரல் எழுந்து வருகிறது.

அரசியல் வீடியோக்கள்

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
ABP Nadu Top 10, 22 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 22 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Embed widget