Chennai Metro: சரியானது தொழில்நுட்ப கோளாறு... சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கம்..!
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 20 மணி நேரத்திற்குப்பின் சரி செய்யப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 20 மணி நேரத்திற்குப்பின் சரி செய்யப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மெட்ரோ ரயில் சேவை
சென்னை மக்களின் மிகப்பெரிய போக்குவரத்து பயன்பாட்டு சாதனமாக மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் தொடங்கி வெளியூர், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களை விட காலை மற்றும் மாலை நேரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
அவதிக்குள்ளான மக்கள்
இந்த சூழ்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான நிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
அனைத்து மெட்ரோ ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணப்பட்ட மக்கள் கடும் அவதியடைந்தனர். இதன் பின்னர் ஊழியர்கள் விரைந்து வந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டுப்பிடித்தனர். இதனையடுத்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது.
அதேசமயம் விமான நிலையத்தில் இருந்து கிண்டி வழியாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர் வழியாக சென்ட்ரல் நிலையத்திற்கு சென்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்த வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் என்ற அடிப்படையிலேயே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்தநிலையில் கிட்டதட்ட 20 மணி நேரத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் சேவையின் தொழில்நுட்பக்கோளாறு இன்று அதிகாலையில் சரிசெய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.