"ஆட்சி பெறும் சுக்கிரன்" - மேஷத்திற்கு டும்-டும்-டும்!
அமைதியாக இருந்தால்... நீங்களும் அமைதியாக காரியங்களை கையாள்வீர்கள்....

அன்பார்ந்த வாசகர்களே மேஷ ராசிக்கு இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதி மான சுக்கிரன்... துலாம் ராசியில் ஆட்சி பெறுகிறார்... அற்புதமான வீடு... சூரியன் நீச்சம் பெறும் ராசிய அதிபதி சுக்கிரன் ஆட்சி பெறுவது நவம்பர் மாத முதல் வாரத்திலேயே நீச்ச பங்க ராஜயோகத்தை ஏற்படுத்துகிறது... அதன் மூலம் நீண்ட நாட்களாக வரன் பார்த்துக் கொண்டிருக்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு வாழ்க்கை துணை தற்போது கண்ணில் தென்படுவார்... அவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் கூட இருவிட்டு சம்மதத்துடன் மிகச் சிறப்பாக நடைபெறும்... உங்களுக்கென்று ஒருவர் வருவார் அவர் தான் உங்கள் வாழ்க்கை துணை என்று இருந்த கற்பனைக்கு கலை வடிவம் கொடுக்கப் போகிறது துலாம் விட்டு சுக்கிரன்.... குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சில சம்பவங்களை சந்திக்கலாம்... சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரம் ஆன சித்தரையில் பிரவேசிக்கும் காலத்தில் நல்ல தன லாபம் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்... குறிப்பாக சொல்லப்போனால் மேஷ ராசிக்கு அதிபதி சுக்கிர ராசி அதிபதியின் ஜாரம் பெறுவது எவ்வளவு பெரிய வழக்குகள் உங்கள் மீது போட்டாலும் கூட அதில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை சுக்ராச்சாரியார் கொடுக்கப் போகிறார்...
மேஷத்தை பொருத்தவரை... அமைதியாக இருந்தால்... நீங்களும் அமைதியாக காரியங்களை கையாள்வீர்கள்.... உங்களிடம் அதிகாரம் செய்தால் நீங்களும் யார் என்று காண்பிப்பீர்கள்.... விலகி சென்ற நபர்கள் கூட விரும்பி வந்து பேசக்கூடிய காலகட்டம்... பெரிய பெரிய பொறுப்புகளில் இருக்கிறவர்கள் உங்களைத் தேடி வந்து உங்களுக்கான மரியாதையை கொடுத்து விட்டு செல்வார்கள்...
சுக்கிரன் ராகுவின் நட்சத்திரமான சுவாதியில் பயணம் செய்யும்பொழுது திரைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான காலமும் நல்ல முன்னேற்றமான நேரம் வந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்... உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல இடங்களுக்கு சென்று உங்களுக்கான வாய்ப்புகளைத் தேடிக் கொள்ள நேரம் வந்துவிட்டது... ரத்த சொந்தத்தை விட்டு பிரிந்து இருந்த நபர்கள் கூட தற்பொழுது ஏதாவது ஒரு வகையில் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது..... சுக்கிரன் குருவின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலகட்டத்தில் குரு வக்ர நிலையில் இருப்பார் அப்பொழுது உச்சம் என்ற அம்சத்தில் உருபகவான் உங்களுக்கு தேவையானவற்றை வாரி வழங்க தயாராக இருக்கிறார்.... மேஷ ராசிக்கு 9 ஆம் வீட்டு அதிபரின் நட்சத்திரத்தை ஆட்சி பெற்ற சுக்கிரன் வாங்கினால் வேறு என்ன வேண்டும்... கேட்டது கிடைக்கும்.... நீண்ட துவார பிரயானங்களை மேற்கொள்வீர்கள்... உற்றார் உறவினரிடம் சற்று கவனமாக பேசுங்கள்... நீங்கள் பேசுகின்ற காரியங்கள் கூட உங்களுக்கு எதிராக திரும்பலாம் வயிறு உப்புசமாக இருக்கிறது என்று நினைத்தால் சாப்பாட்டின் அளவை பாதியாக குறைத்து விட்டு திரவ உணவை எடுத்துக் கொள்ளலாம் அல்லது பழ வகைகளை உண்ணலாம்... புதிய இடங்களுக்கு சென்று வர வாய்ப்பு உண்டு.... அதேபோல ஆடம்பரமான வாழ்க்கையை தற்போது நீங்கள் வாழ ஆரம்பிப்பீர்கள்... வீடு கட்டுவதற்கான யோகமும் அதிகமாக இருக்கிறது நான்காம் அதிபதிக்கு லாப ஸ்தானத்தில் அதிபதியான சுக்கிரன் ஏழில் வளம் பெறும் பொழுது நிச்சயமாக வாகன யோகமும் அல்லது வீடு சம்பந்தப்பட்ட யோகமும் உங்களுக்கு உண்டாகும்....





















