ஆட்டம் காட்டிய குட்டி முதலை: 18 நாட்கள் போராட்டத்துக்குப் பின் பிடித்த வனத்துறையினர்
மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமத்தில் குளத்தில் புகுந்து மக்களை அச்சுறுத்திவந்த முதலையை 18 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து அணைக்கரை ஆற்றில் விட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமத்தில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ஓமக்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்தி வருகின்றனர். துணி துவைத்தல், கால்நடைகளுக்கு தண்ணீர் அருந்த செய்தல், குளிக்க உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
Actress Sakshi Agarwal: ட்ராம்போலினில் குழந்தைபோல் விளையாடி தடுக்கி விழுந்த சாக்ஷி அகர்வால்!
இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி முதலை ஒன்று பழவாற்றின் வழியாக வந்து இந்த குளத்தில் புகுந்துள்ளது. இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன், சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் ஓமக்குளத்திற்கு சென்று, மூன்று இடங்களில் பள்ளம் தோண்டி, கோழி இறைச்சியை வைத்தும், மீன் வலைகளை விரித்தும் முதலையை பிடிப்பதற்கு பொறிவைத்து குளத்திலே பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை பலகையும் வைத்தனர்.
”மாப்பிள்ளை கை பட்டுடுச்சு, எனக்கு பிடிக்கல..” : திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. அதிர்ந்த உறவினர்
தொடர்ந்து முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினரிடம் 17 நாட்கள் ஆட்டம் காட்டிய வந்த முதலை 18 வந்து நாளான இன்று அந்த முதலை வலையில் சிக்கி பிடிபட்டது. இதைக்கண்ட கிராமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து, சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையிலான வனத்துறையினர் ஓமக்குளத்திற்கு சென்று பார்த்தபோது, 12 கிலோ எடைகொண்ட 2 வயது பெண் முதலை சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அந்த முதலையை பாதுகாப்பாக மீட்டு, அணைக்கரை ஆற்றுக்கு கொண்டு சென்று அதனை பாதுகாப்பாக ஆற்றில் விட்டனர். 18 நாட்களுக்குப் பிறகு முதலை பிடிப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக தகவல் பெறும் உரிமை சட்ட அலுவலகம்" - மாநில தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆணையர்
மேலும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் வழியாக அணைக்கரை ஆற்றுப் பகுதியிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வழிவகை உள்ளது என்றும், இதனால் ஆற்று பகுதிகளில் தண்ணீர் குடிக்கச் செல்லும் கால்நடைகளுக்கும், ஆற்றில் குளிக்கச் செல்லும் மனிதர்களுக்கும் ஆபத்து நிலவுவதாகவும், இதனை வனத்துறையினர் முறையாக கண்காணித்து, ஆற்றில் அடித்து வரும் முதலைகளை பிடித்து முதலை பண்ணைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.