மேலும் அறிய

கலை இளமணி முதல் கலை முதுமணி வரை.. மயிலாடுதுறையில் 15 பேருக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு!

மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாவட்டக் கலை விருதுகளுக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் தொன்மைமிக்க கலைப் பண்புகளை மேம்படுத்தும், பாதுகாக்கும் நோக்கிலும், பாரம்பரியக் கலைஞர்களின் கலைத் திறனை ஊக்குவித்துச் சிறப்பிக்கும் வகையிலும் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாவட்டக் கலை விருதுகள் வழங்கப்பட உள்ளன. மயிலாடுதுறை மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 தகுதியான கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான விவரங்கள் வருமாறு;

வரலாற்றுப் பின்னணியும் கலை விருதுகளும்

தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளையும், நலிவடைந்த கலைஞர்களையும் கௌரவிக்கும் வகையில், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் 'மாவட்டக் கலை மன்றங்கள்' செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் சிறந்த 15 கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களின் வயது மற்றும் கலைப் புலமைக்கு ஏற்றவாறு உயரிய கலை விருதுகளை வழங்கும் திட்டம் கடந்த 2002-2003 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான மாவட்டக் கலை விருதுகளை வழங்குவதற்காக, தகுதியான கலைஞர்களைத் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் விரைவில் உயர்மட்டத் தேர்வாளர் குழு கூடவுள்ளது. இக்குழுவின் மூலம் மாவட்டத்தின் சிறந்த முத்தமிழ் கலைஞர்கள் 15 பேர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கத் தகுதியான கலைப் பிரிவுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செவ்வியல் கலைகள் மற்றும் அரிய நாட்டுப்புறக் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலைகளின் விவரம்

செவ்வியல் கலைகள்: பாட்டு, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் பாரம்பரிய இசைக் கருவிகள் வாசித்தல்.

நாட்டுப்புறக் கலைகள்: கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை நிழற்கூத்து, நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம்.

மரபுக் கலைகள்: மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பாட்டம்.

மேற்கண்ட கலைகளில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளிலோ தனித்திறமை பெற்று விளங்கும் உள்ளூர் கலைஞர்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பின் அடிப்படையில் 5 வகை விருதுகள்

கலைஞர்களின் வயது மற்றும் அவர்களின் கலைப் பயணத்தின் கால அளவைக் கணக்கில் கொண்டு, இந்த மாவட்டக் கலை விருதுகள் ஐந்து பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட உள்ளன.

* 01 கலை இளமணி: 18 வயதும் அதற்குட்பட்ட இளங் கலைஞர்கள் 

* 02 கலை வளர்மணி: 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வளரும் கலைஞர்கள் 

* 03 கலைச் சுடர்மணி: 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்கள் 

* 04 கலை நன்மணி: 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட மூத்த கலைஞர்கள்

*05 கலை முதுமணி: 66 வயதும் அதற்கு மேற்பட்ட முதிய கலைஞர்கள் 

முக்கிய நிபந்தனைகள் மற்றும் தகுதிகள்

* விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த (பூர்வகுடிகளாக) இருக்க வேண்டும்.

* விண்ணப்பத்துடன் தங்களின் வயதுச் சான்று (ஆதார் அட்டை/பள்ளிச் சான்றிதழ்) மற்றும் கலைத் துறையில் தங்களுக்குள்ள அனுபவத்திற்கான சான்றிதழ்களின் நகல்களை (Xerox) இணைத்து அனுப்ப வேண்டும்.

முக்கியக் கட்டுப்பாடு: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே தேசிய விருது, மாநில விருது (கலைமாமணி போன்றவை) மற்றும் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக ஏதேனும் ஒரு விருதினைப் பெற்ற கலைஞர்கள், மீண்டும் இந்த மாவட்டக் கலை விருதிற்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லை. புதிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

இம்மாவட்ட விருது பெறத் தகுதி வாய்ந்த கலைஞர்கள் தங்களின் முழுமையான சுயவிவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் 30.07.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி: உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம்,

(மண்டல கயிறு வாரியம் அருகில்),

வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி,

தஞ்சாவூர் – 613 403.

கூடுதல் தகவல்களுக்கு:

இவ்விருதுகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் கலைஞர்கள் 9442507705 மற்றும் 9655077051 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தனது செய்திக்குறிப்பில் விவரித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தின் கலைப் பெருமையைப் பறைசாற்றும் கலைஞர்கள் இந்த நல்வாய்ப்பைப்பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

" வயது வித்தியாசம் பிடிக்கல " திருமணத்தை நிறுத்த சொன்ன 21 வயது பெண் !! இறுதியில் நடந்த கொடூரம்
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்!
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்! "Drug Free TN" செயலியுடன் அதிரடி வேட்டைக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்!
வேகத்தடைகளில் புதிய மாற்றம்... ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் சொன்ன விழுப்புரம் கலெக்டர்!
வேகத்தடைகளில் புதிய மாற்றம்... ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் சொன்ன விழுப்புரம் கலெக்டர்!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget