மரக்காணம் - புதுச்சேரி 4 வழிச்சாலை: ரூ.2157 கோடி திட்டம்! முக்கிய நகரங்கள் இணைப்பு! விரைவில் பணி தொடக்கம்
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்துடன், மரக்காணம்-புதுச்சேரி புதிய நான்கு வழிச்சாலை திட்டம், பசுமை வழி பைபாஸ் சாலையுடன் ரூ. 2,157 கோடியில் பணி செயல்படுத்தப்பட உள்ளது.

விழுப்புரம்: சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களை இணைக்கும் மற்றொரு பெரிய நான்கு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சாலை, மாமல்லபுரத்தில் தொடங்கி மரக்காணம், புதுச்சேரி, கடலூர் வழியாக தூத்துக்குடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையை தரம் உயர்த்துவதாகும்.
இத்திட்டத்தில், மாமல்லபுரம் -புதுச்சேரி இடையே 108 கி.மீ., நான்கு வழிச்சாலை திட்டமிட்டு (கிழக்கு கடற்கரை சாலை) விரிவாக்க பணிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. தற்போது மாமல்லபுரம் -மரக்காணம் வரை நான்கு வழிச்சாலை திட்டபணிகள் நடைபெற்று வருகிறது. இரு வழிச்சாலையை விரிவாக்கம் செய்து, புதிய நான்கு வழி சாலை திட்டம் நடந்து வருகிறது.
(மரக்காணம்- புதுச்சேரி) 46.47 கிலோ மீட்டர் ... புதிய நான்கு வழிச்சாலை ; ரூ.2157 கோடி திட்டம்
மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை அகலப் படுத்தும் திட்டத்தில், இடையே மரக்காணத்தி லிருந்து புதிய பைபாஸ் வசதியுடன், நாகப்பட்டினம்-விழுப்புரம் 4 வழிச் சாலையுடன் இணைக்கும் புதிய திட்டம் முயற்சிக்கப்பட்டது.
இதற்காக, மத்திய அரசின் ஒப்புதலுக்கு தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. அதன்படி, மரக்காணம் புதுச்சேரி புதிய நான்கு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
மரக்காணம்- புதுச்சேரி (என்.எச்.33 26ஏ) இடையே 46.47 கிலோ மீட்டர் தொலைவிற்கு, புதிய நான்கு வழிச்சாலை ரூ.2157 கோடி மதிப்பில் அமைகிறது. ஏற்கனவே தொடங்கி நடந்து வரும், மாமல்லபுரம்- மரக்காணம் நான்கு வழிச்சாலை திட்டத்துடன், இந்த புதிய நான்கு வழிச்சாலை திட்டம், மரக்காணத்தில் தொடங்கி புதுச்சேரி நகருக்கு செல்லாமல் வலது புறம் திரும்பி கிராமப்புறங்கள் வழியாக புதிய பைபாஸ் போடப்பட்டு, புதுச்சேரி -விழுப்புரம் இடையே உள்ள கண்டமங்கலம் அருகே ஆழியூர் கிராமத்தில் இது முடிகிறது.
அங்கு செல்லும், விழுப்புரம்- நாகப்பட்டினம், நான்கு வழிச்சாலையுடன், இந்த புதிய நான்கு வழிச்சாலை இணையும் வகையில் கட்டமைக்க புதுச்சேரி நான்கு வழிச்சாலை திட்டம் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 40 சதவீதம் நிதியை மத்திய அரசு ஒதுக்கும், பிறகு படிப்படியாக திட்டம் நிறைவேற்றும் போது எஞ்சிய தொகை உள்ளது.
மரக்காணத்தில் பசுமை வழி புறவழிச்சாலை
மரக்காணத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கும் (மரக்காணம்-புதுச்சேரி) இந்த புதிய நான்கு வழிச்சாலை, 12 கி.மீ., தொலைவில் கூனிமேடு பகுதியில் வலதுபுறமாக விவசாய நிலங்கள் வழியாக பிரிந்து, புதிய பைபாஸ் சாலையாக அமைகிறது. இந்த பசுமை வழி பைபாஸ் சாலை, கண்டமங்கலம் வரை, 36 கிலோமீட்டர் தொலைவிற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கிராமபகுதிகளில் புதிதாக கட்டமைக் கப்படுகிறது.
இத்திட்டத்தின் இடையே, வழியில் வரும் தேசிய நெடுஞ்சாலைகளும் (என்.எச். 32: சென்னை-தூத்துக்குடி மற்றும் என்.எச். 332 புதுச்சேரி-விழுப்புரம்), மாநில நெடுஞ்சாலைகளும் (எஸ்.எச். 136 மயிலம் - புதுச்சேரி, எஸ்.எச். 23 முண்டியம்பாக்கம்-புதுச்சேரி) இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.
ரயில், விமான நிலையங்கள் இணைப்பு
புதிய நான்கு வழிச் சாலை திட்டம், தமிழகம், புதுச்சேரியின் முக்கிய நகரங்களை இணைத்து, விரைவான வாகன போக் குவரத்திற்கும், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஏதுவாக அமையும். இதன் மூலம் சென்னையிலிருந்து புதுச்சேரி, கடலுார், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் பகுதிக ளுக்கு தளவாடங்கள் மற்றும் சரக்குகளை அதிவேகமாக ஏற்றுமதி செய்யவும், நல்ல சாலை மார்க்க வசதியும் ஏற்படும். இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரி, கண்டமங்கலம் ரயில் நிலையங்கள் இணைக்கப்படும். சென்னை நிலையம், விமான விமான புதுச்சேரி நிலையம் இணைக்கப்படுவதோடு, கடலுார் சிறு துறைமுகமும் இணைக்கப்படும். புதிய நான்கு வழிச்சாலை திட்டத்தின் மூலம், பத்து லட்சம் பேர் வேலை பெற்று பயனடைவார்கள்.
முக்கிய நகரங்கள் இணைப்பு
சென்னை-புதுச்சேரி இடையே தற்போதுள்ள கிழக்கு கடற்கரை சாலை மார்க்கத்தில், அதிகரிக்கும் வாகன நெரிசல், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இந்த புதிய நான்கு வழிச்சாலை திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிவேகமாக வளர்ந்து வரும் புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், நாகை போன்ற நகரங்கள் இணைக்கப்படுகிறது. சென்னை, புதுச்சேரி, நாகப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி சாலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, சாலை வசதி மேம்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பணிகள் விரைவில் துவக்கம்
தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI ) அதிகாரிகள் கூறியதாவது:
மரக்காணம்- புதுச்சேரி புதிய நான்கு வழிச்சாலை திட்டம், 46.47 கிலோ மீட்டருக்கு அமைக்கப்படுகிறது. இந்த சாலைக்கான கட்டுமான பணிக்கு ரூ.1,118 கோடி; சாலை விரிவாக்கம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ. 442 கோடி என மொத்தம் ரூ.2,157 கோடியில் பணிகள் நடக்க உள்ளன. இதில், 34.7 கி.மீ., பைபாஸ் சாலையாக அமைகிறது.
மாமல்லபுரம்- புதுச்சேரி நான்கு வழிச்சாலை திட்டம், கடந்த 2022ம் ஆண்டு துவங்கியது. முதற் கட்டமாக மாமல்லபுரம்- முகையூர் இடையே 31 கி.மீ., திட்டப்பணிகள் நடந்து வருகிறது. 2ம் கட்டமாக முகையூர்-மரக்காணம் வரை 31 கி.மீ., இடையே, கடந்த 2023ம் ஆண்டு துவங்கி பணிகள் நடக்கின்றன.
தற்போது, மரக்காணத்திலிருந்து கண்டமங்கலம் வரை 46.47 கி.மீ., புதிய பைபாஸ் திட்ட பணிகள் துவங்க உள்ளது. இது, விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையுடன் இணையும். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கியுள்ளதால், டெண்டர் விடும் பணிகள் நடந்து வருகிறது. ஒரு ரு சில மாதங்களில் இதற்கான பணிகள் முடிந்து, புதிய நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கும்.





















