மேலும் அறிய
Advertisement
Gokulraj murder case : கோகுல்ராஜ் கொலை வழக்கு : இன்று தீர்ப்பளிக்கிறது மதுரை சிறப்பு நீதிமன்றம்
சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உள்பட கூட்டாளிகள் 17 பேரை கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜோதிமணி ஏற்கனவே இறந்துவிட்டார்
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணையனது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்தநிலையில், சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
முன்னதாக, கோகுல்ராஜூடன், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்து வந்தனர். அவர்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்படுவதற்கு முதல்நாள் அவரும், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அர்த்தநாரீஸ்வரர் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் சிபிசிஐடி போலீசார், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததையும், கோகுல்ராஜை மட்டும் ஒரு கும்பல் தனியாக அழைத்துக்கொண்டு காரில் கடத்திச்செல்வதையும் அந்த வீடியோகாட்சிகளில் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து, கோகுல்ராஜின் தாயாரின் மனுவை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மவாட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2015 அக்டோபரில் 1ல் கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த ஜாமின் 2018 ஜூன் 2-ல் தேதி ரத்து செய்யப்பட்டது.
நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தேர்தல் 2024
தேர்தல் 2024
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion