(Source: ECI/ABP News/ABP Majha)
திருவாரூர் பல்கலைக்கழகத்திற்கு லட்சத்தீவில் நுழைவுத்தேர்வா..? மத்திய அரசை விளாசிய சு.வெங்கடேசன் எம்.பி..!
மதுரை மாணவருக்கு மத்திய பல்கலைகழகத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு லட்சத்தீவில் நடத்தப்படுவதாக அனுப்பப்பட்ட ஹால் டிக்கெட் சம்பவத்திற்கு சு.வெங்கடேசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசு நுழைவுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, நாளை மத்திய பல்கலைகழகங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் திருவாரூரில் மட்டுமே மத்திய பல்கலைகழகம் உள்ளது. இந்த பல்கலைகழகத்தில் சேர்வதற்காக நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பலரும் விண்ணப்பித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் நுழைவுத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளார். அவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்துள்ளது. அதில், அவருக்கு நுழைவுத்தேர்வு நடைபெறும் இடம் லட்சத்தீவு என்று வந்துள்ளது. இதனால், மாணவரும், அவரது குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலை கழகம். திருவாரூரில் அமைந்துள்ளது. அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளது. அவர் மதுரைக்காரர். பிரித்துப் பார்த்த அவரது தந்தைக்கு அதிர்ச்சி. தேர்வு மையம் லட்சத் தீவில்.
மேலும் படிக்க : 'டிவில இண்டர்வியூ கொடுக்றாங்க.. விசாரணைக்கு வரமாட்டாங்களா?' சசிகலாவை சீண்டிய ஜெயக்குமார்!
எப்படி மாணவர் போவார்? கப்பலில் அல்லது விமானத்தில்? இப்படி ஒரு வாரம் கூட அவகாசம் தராமல் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவது என்றால் எவ்வளவு செலவு? விமானத்திற்கு நாளுக்கு நாள் கட்டணம் ஏறும் ? இதில் அனுமதிச் சீட்டோடு வந்துள்ள அறிவுரை சீட்டில் ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை வேறு.
மாணவரின் தந்தை பதறிப் போய் வந்தார். இவரைப் போல எத்தனை மாணவர்களோ? பெற்றோர்களோ? ஏழை, நடுத்தர குடும்பங்கள் என்ன செய்யும்? மன உளைச்சல்? பணத்திற்கும் அலைச்சல்? உயர் கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இது போன்ற மாணவர்களுக்கு மையத்தை மாற்றுங்கள் என்று தேர்ச்சி பெறுவதை விட தேர்வு மையத்துக்கு சென்று சேர்வது கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : விநாயகர் சதுர்த்தி விழா என்பது மத வழிபாடு.. அரசு தலையிடுவது கண்டனத்திற்குரியது - இந்து முன்னணி மாநில துணைத்தலைவர்
மேலும் படிக்க : Congress : புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு தேதி குறிப்பு...காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் எப்போது?