மேலும் அறிய

தி.நகரில் விதிமீறல் கட்டிடங்கள்.. 8 வாரங்களில் இடிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட் அதிரடி!

சென்னை தியாகராய நகரில் வணிக கட்டிடங்களில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தி.நகரில் விதிமீறல் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி இல்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை தியாகராய நகரில் வணிக கட்டிடங்களில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக விதி மீறியவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடங்களை இடிக்க CMDA அனுப்பிய நோட்டீஸ்-க்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள்:

சென்னை, தியாகராய நகர், பாண்டிபஜாரில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய வணிக கட்டிடத்துக்கு அனுமதி பெற்று விட்டு, அனுமதியை மீறி, 10 தளங்கள் வரை கட்டிய ஜன்பிரியா பில்டர்ஸ் நிறுவனம், அனுமதின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை வரன்முறை செய்யக் கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்தது.

இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அரசிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, கட்டிடத்துக்கு சீல் வைத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது.

இதனை எதிர்த்து, கட்டுமான நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

நீதிபதிகள் கூறியது என்ன?

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, கட்டுமானத்தை வரன்முறை செய்ய மறுத்து, பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழக அரசுகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடராத கட்டுமான நிறுவனம், கட்டுமானத்தை இடிக்க எடுத்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், எட்டு வாரங்களில் அனுமதில்லாமல் கட்டப்பட்ட தளங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது. வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஒருபுறம் கட்டிட திட்ட அனுமதியை வலியுறுத்தும் அதிகாரிகள், மறுபுறம் அவற்றை வரன்முறை செய்யக் கோரும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்குவதாக நீதிபதிகள்  தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக விதிமீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
OPS: தனிக்கட்சி தொடங்குவாரா ஓபிஎஸ்? அதுலயும் இத்தனை சிக்கல் இருக்கா..!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
TVK Vijay: தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் - என்ன செய்யப்போகிறார் விஜய்?
TVK Vijay: தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் - என்ன செய்யப்போகிறார் விஜய்?
Kavin Murder : 'பட்டியலினத்தவர் என்றால் கொலை செய்வீர்களா?’ கவினின் உறவினர்கள் ஆவேசம்..!
'காதலித்தால் எங்களை கொல்வீர்களா?’ கவினின் பெற்றோர் கதறல்..!
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Embed widget