மேலும் அறிய

உலக நாடுகளே திணறுகிறது! சிலிண்டர் விலை உயர்வு.. தற்காலிகம் மட்டுமே.. தமிழிசை சொன்ன தகவல்

5 மாநில தேர்தல் முடிந்த பிறகு வர்த்தக சிலிண்டர் விலை ஏற்றம் ஏன் என்ற கேள்விக்கு போர் எப்போது நடந்து கொண்டிருக்கிறது, போரின் தாக்கம் எப்போது இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும் என தமிழிசை தெரிவித்தார்

வர்த்தகரீதியான சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிக மாற்றம் மட்டுமே. பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை காரணம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மேலூர் பகுதியில் உள்ள திருவுடையம்மன் கோயிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பௌர்ணமி நாளில் திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியுடையம்மன் ஆகிய மூன்று தேவியை வணங்கிட வேண்டும் என வந்துள்ளதாக கூறினார். தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்று மாற்றம் வர வேண்டும் எனவும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார். 

8 மாநிலங்களில் உள்ள டபுள் என்ஜின் அரசு மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது போல, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்து பிரதமர் மோடியுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றும், 4ஆம் தேதி தமிழ்நாட்டு மக்கள் நல்லதை அருள்வார்கள் என்றார். கருத்துக் கணிப்புகள் குறித்த கேள்விக்கு, கருத்துக் கணிப்புகள் ஒரு மாதிரியாக உள்ளதா, ஒரு மாதிரியா ஆக உள்ளதா என  கேள்வி எழுப்பிய தமிழிசை, exit polls are not exact polls, எனவும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் சரியானவை அல்ல எனவும் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார். 

பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது, இந்தியாவில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை, பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை. வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிகமான மாற்றம் மட்டுமே. 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு விலை ஏற்றம் ஏன் என்ற கேள்விக்கு போர் எப்போது நடந்து கொண்டிருக்கிறது, போரின் தாக்கம் எப்போது இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். நமது நாட்டை பிரதமர் பாதுகாப்பாக வைத்துக் கொண்டுள்ளார். திமுகவிற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ற கேள்விக்கு, மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்குகளை தந்திருப்பார்கள் என நம்புவதாக பதிலளித்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கோரிக்கை!
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கொந்தளிப்பு!
அவிநாசிக்கு உதயமாகும் புதிய 4 வழிச்சாலை ரோட்! நெரிசலுக்கு என்ட் கார்டு! அவிநாசிக்கு புதிய நம்பிக்கை...
அவிநாசிக்கு உதயமாகும் புதிய 4 வழிச்சாலை ரோட்! நெரிசலுக்கு என்ட் கார்டு! அவிநாசிக்கு புதிய நம்பிக்கை...
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget