சிம்ம ராசி - உங்கள் காதல் வாழ்க்கை எப்படிப்பட்டது?
சிம்ம ராசியை பொறுத்தவரை வெளி உலகத்தில் அவர்கள் ராஜாவாக இருந்தாலும் வீட்டிற்குள் மனைவியை அல்லது வாழ்க்கை துணையை ராஜாவாக்கி அழகு பார்ப்பது அவர்களின் குணம்...

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசியே சிங்கம் போல தனித்திருப்பது தான்....யாருடனும் சேராமல் எதை பற்றியும் கவலைப்படாமல் எப்படி ஒரு சிங்கம் பசித்தால் வேட்டையாடுமோ அது போல பிரச்சனையைக் கண்டு பொங்கி எழுவது உங்கள் குணம்... அதுவரை இருக்கின்ற இடமே தெரியாமல் சாந்தமாக உங்கள் எல்லைக்குள் அமைதியாக இருப்பீர்கள்...
சிம்ம ராசியின் காதல் வாழ்க்கை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. வெளி உலகத்திற்கு டாபீகமாக தெரிந்தாலும் உங்களுடைய வாழ்க்கைத் துணை இடம் என்ன வேண்டும்? எப்படி வேண்டும்? என்று ஒவ்வொரு காரியத்தையும் கேட்டு கேட்டு செய்வீர்கள்... சிம்ம ராசியை பொறுத்தவரை வெளி உலகத்தில் அவர்கள் ராஜாவாக இருந்தாலும் வீட்டிற்குள் மனைவியை அல்லது வாழ்க்கை துணையை ராஜாவாக்கி அழகு பார்ப்பது அவர்களின் குணம்... கடினமான வேலையும் சுலபமாக முடிக்கும் உங்களிடம் வாழ்க்கைத் துணையை புரிந்து கொள்வதில் சற்று சிக்கல்கள் இருந்தாலும் அவர்களைப் பற்றி காலம் கடக்க நன்றாக புரிந்து வைத்துக்கொண்டு நீங்கள் எதிலும் ஜெயிப்பீர்கள்...
கவிதைகள் பேசவோ.. பாடல்கள் பாடவும் மற்றவர்கள் போல் நடிக்கவோ பெரிதாக உங்களுக்கு தெரியாது... மனதிற்குப் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள் என்ன தெரியுமோ அதைப்பற்றி கூறுவீர்கள்... உண்மையை சொல்லி வாழ்க்கையை நகர்த்துவீர்கள்... எதை ஏன் எப்படி பேச வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் திட்டம் போட்டு சரியாக வாழ்கிறேன் நகர்த்த வேண்டும் என்பதற்காக உழைப்பே தாரக மந்திரமா எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள்...
அனைவரும் ஜாலியாக காதலித்தால் நீங்கள் மட்டும் பொறுப்போடு காதலிப்பீர்கள் உங்கள் வாழ்க்கை துணை அப்படியாக தான் அமைவார்கள் நன்றாக வேலை செய்பவராக வீட்டை நன்றாக பார்த்துக் கொள்பவராக இருப்பார்கள்... எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக அந்த காரியத்தை செய்து முடிப்பதில் வல்லவர் நீங்கள் சரி வாழ்க்கை துணை எப்படிப்பட்டவர் ஏழையா பணக்காரரா உங்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை இருக்கிறது என்றால் அமைதியாக ஏற்றுக் கொள்வீர்கள் இல்லையென்றாலும் கவலையில்லை நீங்கள் நன்றாக சம்பாதித்து வாழ்க்கை துணைக்கு தேவையானவற்றை நீங்களே போசிப்பீர்கள்... குறிப்பாக பெண்ணாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைவர் ஆணாக இருந்தால் அவரை அமர வைத்து நீங்கள் அனைத்தையும் சம்பாதித்து செட்டிலாகும் அளவிற்கு சேமிப்பீர்கள்...ஒருவேளை உங்கள் வாழ்க்கைத் துணைவர் பெண்ணாக இருந்தால் கவலையே இல்லை ஒருவேளைக்கு இரு வேலை பார்த்து வீட்டை காப்பாற்றுவீர்கள் அந்த அளவுக்கு உங்களுடைய நேசம் பெரிதாக இருக்கும்...
கத்தியின்றி இரத்தமின்றி எந்த ஒரு திருமணமும் நடக்கக்கூடாது என்று விரும்புவர்... ஆனால் உங்களுடைய காதல் வாழ்க்கைக்கு பிறகு திருமணம் இது போன்று சவாலாகவே இருக்கும்... சற்று சிலரை வகுத்துக் கொண்டு பலரை ஆதரித்து திருமண வாழ்க்கைக்கும் அடைவீர்கள் ஆனாலும் வாழ்க்கை துணையை இறுதி வரை விடாமல் பிடிப்பீர்கள்... சிம்மத்தின் குணம் சீண்டிப் பார்த்தால் தெரியும் என்பார்கள் அதுபோல உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பாய்ந்து நீங்கள் யார் என்று காட்டலாம் ஆனால் உங்கள் வாழ்க்கை துணைக்கு ஏதாவது ஒன்று என்றால் அவ்வளவுதான்...
காற்றிலே கலந்து சுவாசமாய் இறுதி மூச்சு வரை வாழ்க்கை துணையுடனே காதலோடு பின்னிப் பிணைந்து வாழ்வதில் வல்லவர் நீங்கள் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு சற்று சமாதானமாக எந்த பேச்சையும் தொடங்குங்கள் வெற்றியில் முடியும்....




















