Tasmac Closed : ”முக்கிய அறிவிப்பு – டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்” எங்கு, எப்போது..?
’தேர்தல் ஓரு வகையில் விழா என்றால், டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் சாதாரண விழா திருவிழாவாக குடிமகன்கள் மூலம் மாறிப் போகிறது’

தமிழ்நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுத் தருவது டாஸ்மாக் மதுபான கடைகள்தான். அதனால்தான் எந்த அரசு ஆட்சி அமைத்தாலும் மதுபான கடைகளை மூட முடியாமல் தவிக்கின்றனர். உலகையே அச்சுறுத்திய கொரோனா காலக்கட்டத்தில் கூட மதுபான கடைகள் திறக்கப்பட்டப்போது நீண்ட வரிசையில் நின்று மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.
விடுமுறை தினத்திற்கு முன்னரே விற்றுத் தீரும் சரக்குகள்
அப்படியான நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மாகாவீரர் தினம் உள்ளிட்ட முக்கியமான தினங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இருப்பினும், விடுமுறை என்று தெரிந்தாலே அதற்கு முந்தைய நாளே விடுமுறை விட்ட தினத்தை காட்டிலும் அதிக அளவில் மதுபானங்கள் விற்பதும் இனி கடையே திறக்கமாட்டார்கள் என்பதுபோன்றுப் போன்று போட்டிப் போட்டுக்கொண்டு மதுபான பாட்டில்களை குடிமகன்கள் வாங்கிச் செல்வதும் தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களிலும் வாடிக்கையாகதான் இருந்து வருகிறது,.
விழா நாட்களில் திருவிழா ஆகும், டாஸ்மாக் கடைகள்
அதுமட்டுமின்றி, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வீடுகளில் கொண்டாட்டம் இருக்கிறதோ இல்லையோ நிச்சயமாக டாஸ்மாக் வாசலில் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. திருவிழாவிற்கு வந்த கூட்டம் மாதிரி மணி கணக்கில் நின்று மதுபானங்களை மதுபிரியர்கள் வாங்கிச் செல்வதால், ஒவ்வொரு வருடமும் மதுபான விற்பனை இலக்கு என்பது ஒரு படிநிலை கூட குறையாமல் வானை நோக்கி ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே போகிறது.
டாஸ்மாக் கடைகள் மூடல்
இந்நிலையில், பிரச்னைக்குரிய நாட்களிலும், தேர்தல் நேரங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஏனென்றால், மதுபானங்களை அருந்திவிட்டு நிலை தெரியாமல் பிரச்னையை குடிமகன்கள் இழுத்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த தொகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், மதுப்பிரியர்களும் உண்மையான குடிமகன்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும், தொடர் ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக மதுபான கடைகள் மூடப்படும் முன்னரே, மூடப்படும் நாட்களுக்கும் சேர்த்து மதுபான பாட்டில்களை வாங்கி வைக்கும் படலம் இப்போது ஈரோட்டில் தொடங்கியிருக்கிறது.
அதனடிப்படையில் வரும் நாளை வரை ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்டு செயல்பட்ம் 182 டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். தேர்தல் என்றாலே மதுபானங்கள் இல்லாமல் நடைபெறாது என்ற நிலை வந்துவிட்ட நிலையில், மதுபான கடைகளை மூடினாலும், கள்ளச் சந்தையில் மது விற்பனை என்பது எப்போதும்போல நடந்து வருகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதே மாதிரி டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது தொடர்பாக முன் கூட்டியே அறிவிப்பு கொடுக்காமல் திடீரென மதுக் கடைகளை மூடினால் பல விரும்பத்தகாத நிகழ்வுகளை இதன் மூலம் தடுக்கலாம் என்பதும் அவர்களது எண்ணமாக இருந்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி நடவடிக்கை எடுப்பாரா என்ற ஆவலும் எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

