நிலச்சரிவைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள்.. இனி இதை ஃபாலோ பண்ணுங்க!
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலச்சரிவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
நிலச்சரிவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கலந்துரையாடலை இந்திய தரநிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., வழிகாட்டுதலின் கீழ் நடத்தியது.
நிலச்சரிவைக் கட்டுப்படுத்துவது எப்படி?
இக்கூட்டத்தில் 41 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். வேளாண் துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வனத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சுற்றுலாத் துறை, நெடுஞ்சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தொழிலாளர் ஆட்சேர்ப்புத் திட்டம், நீர்வள ஆதாரத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் போன்ற மாநில அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிலச்சரிவுகள் போன்ற சரிவு உறுதியற்ற தன்மைகளை திறம்பட சரி செய்வதற்கும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு நிகழ்வுகளை குறைப்பதற்கும், பல்வேறு நிலச்சரிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், அதை சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து எடுத்துரைக்கிறது.
மேலும், சமீப காலமாக திட்டமிடப்படாத உருவாக்கப்பட்ட நடவடிக்கைகள், பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் மற்றும் நவீன வாழ்க்கைக்கான தேவைகள் அதிகரித்து வருவதால் நிலச்சரிவுப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.
வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்:
எனவே நிலவும் பொதுவான நிலச்சரிவு நிகழ்வைப் புரிந்து கொள்வதற்கும் அவற்றின் மதிப்பீட்டை முக்கியமாக பயனுள்ள திருத்த நடவடிக்கைகளை திட்ட மிடுவதற்கும் இந்த தரநிலை உருவாக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., தொடக்க உரையாற்றினார்.
தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.ஜெயசீலன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். திருமதி ஹேமலதா பணிக்கர், இணை இயக்குநர், இந்திய தரநிர்ணய அமைவனம், மதுரை, பிஐஎஸ்-ன் முக்கிய செயல்பாடுகள், தரநிலைப்படுத்தல், இணக்க மதிப்பீட்டுத் திட்டம் மற்றும் பிஐஎஸ் கேர் செயலியின் அம்சங்கள் பற்றிய சுருக்கமாக வழங்கினார்.
நிலச்சரிவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் - வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள் குறித்த விரிவான விளக்கத்தை அவர் வழங்கினார். விளக்கக்காட்சியின் பின்னர் விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது மற்றும் தரநிலைகள் தொடர்பான பல கேள்விகள் தெளிவுபடுத்தப்பட்டன.
பங்கேற்பாளர்கள் இந்த இந்திய தரநிலை தொடர்பான தொழில்நுட்ப கேள்விகள் / கருத்துகளை மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.