TN Lockdown : கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை.. அதிர்ச்சி தரும் சென்னை விலைப்பட்டியல் இதோ..
பீன்ஸ் :ரூ.300 (நேற்றைவிட ரூ.120 அதிகம்), காலிஃபிளவர் : ரூ.65 (நேற்றைவிட ரூ.30 அதிகம்), வெண்டை : ரூ 90 (நேற்றைவிட ரூ.60 அதிகம்) என்பதாக விலையேற்றப்பட்டுள்ளது
கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தத் தமிழகத்தில் மேலும் ஒருவாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்குக்குத் தயார்படுத்திக்கொள்ள மக்கள் கூட்டம் காய்கறிச் சந்தைகளில் கூட்டம் கூட்டமாகக் குவிந்து வருகின்றனர். வியாபாரிகள் காய்கறி விலையையும் கிடுகிடுவென உயர்த்தியுள்ளனர்
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் இன்று (ஒரு கிலோ)
வெங்காயம்: ரூ.50 (நேற்றைவிட ரூ.20 அதிகம்)
சின்ன வெங்காயம் : ரூ 80 (நேற்றைவிட ரூ.40 அதிகம்)
தக்காளி: ரூ 60 (நேற்றைவிட ரூ.45 அதிகம்)
உருளைக்கிழங்கு:ரூ 45 (நேற்றைவிட ரூ.20 அதிகம்)
கத்தரி: ரூ.80 (நேற்றைவிட ரூ.50 அதிகம்)
முட்டைக்கோஸ்: ரூ 90 (நேற்றைவிட ரூ.65 அதிகம்)
பீட்ரூட் : ரூ.75 (நேற்றைவிட ரூ.45 அதிகம்)
பீன்ஸ் :ரூ.300 (நேற்றைவிட ரூ.120 அதிகம்)
காலிஃபிளவர் : ரூ.65 (நேற்றைவிட ரூ.30 அதிகம்)
வெண்டை : ரூ 90 (நேற்றைவிட ரூ.60 அதிகம்)
ஊரடங்கு காலத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்திருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read : கடைகளில் குவியும் மக்கள் : விண்ணைத்தொட்ட காய்கறி விலை.. பட்டியல் இதோ