கரூர்: குளித்தலையில் பள்ளியின் முதல் மாடியில் இருந்து விழுந்து மாணவி படுகாயம்
குளித்தலை அருகே லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மாடியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவி கீழே விழுந்ததில் படுகாயம். இடுப்பு, கால், தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.
குளித்தலை அருகே லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மாடியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த 15 வயதான மதுஸ்ரீ என்ற மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இருபாலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று மதியம் பள்ளி கட்டிடத்தின் முதலாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு இடுப்பு, கால், தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். முதலில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதில் மாணவி மயக்கமுற்று பள்ளியின் முதல் தள மாடியில் இருந்து தவறி விழுந்ததாக பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை வருவாய் கோட்டாட்சியின் நேர்முக உதவியாளர் முரளிதரன் மற்றும் லாலாபேட்டை காவல் ஆய்வாளர் ஜோதி ஆகியோர் மாணவி மயக்கம் உற்றதால் கீழே விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக் விபத்தில் சிறுவன் பலி
குளித்தலையை அடுத்த பொய்யாமணி கரைக்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் 47 விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் லோகேஸ்வரன் 14 நங்கவரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவருடைய உறவினர் ஹரிஹரன் 13 அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இரவு 7 மணி அளவில் டிவிஎஸ் ஐமொபெட் நங்கவாரத்தில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தார். மொபெட் ஹரிஹரன் ஓட்டினார்.
லோகேஸ்வரன் பின்னால் அமர்ந்திருந்தார். நங்கவரம் திருச்சாப்பூர் நெடுஞ்சாலையில் கரைக்கலம் பகுதியில் எதிரே வந்த பைக் மோதியது. இதில் படுக்காயம் அடைந்த இருவர்களையும் பகுதியினார் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தன. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லோகேஸ்வரன் உயிர் இழந்தார். ஹரிஹரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து புகாரின்படி குளித்தலை போலீசார் நங்கவாரத்தைச் சேர்ந்த ராசு மகன் ரங்கநாதன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.