கரூர்: பெரியாண்டாங் கோயில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 306 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது.
![கரூர்: பெரியாண்டாங் கோயில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது karur: peiyandangkovil dam water flow decreased கரூர்: பெரியாண்டாங் கோயில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/17/af8a793a6532bc7c0bcaa7c5d0d4b8911663391381315183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அருகே, பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வரும் தண்ணீர் அளவு 306 கன அடியாக குறைந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 963 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 650 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 306 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 88.85 அடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 62 ஆயிரத்து, 503 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 62 ஆயிரத்து, 198 கன அடியாக தண்ணீர் வரத்து சரிந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 60 ஆயிரத்து, 778 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,420 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 33.20 கனஅடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 63 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.26 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 152 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அணையில் இருந்து நொய்யல் ஆற்றின் வினாடிக்கு, 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)