கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 4250 கனஅடியாக அதிகரித்தது.
சமீபத்தில், 12 டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் முதல் கட்டமாக திறக்கப்பட்டது. இதை அடுத்து கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 886 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து 4,250 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும். டெல்டா பாசன பகுதிக்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அமராவதி அணை திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, வினாடிக்கு, 120 கன அடி தண்ணீர் வந்தது.
6 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 334 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 240 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 65.72 அடியாக இருந்தது. நங்காஞ்சி அணை நிலவரம் திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 28.67 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப் பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 11.80 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூர், 1.8 மி. மீ., கிருஷ்ணராயபுரம், ஆகிய பகுதிகளில் தலா 1 மி.மீ., மழை பதிவானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்