கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு
டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 45 ஆயிரத்து, 537 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,420 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 39 ஆயிரத்து, 755 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 46 ஆயிரத்து, 957 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 45 ஆயிரத்து, 537 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,420 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,166 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 600 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 2,477 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 88.46 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 33.26 கனஅடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 63 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.45 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.