70 அடி ஆழமான கிணற்றில் ஆட்டுக்குட்டி தவிப்பு- பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கரூர் அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த ஆட்டை துரிதமாக செயல்பட்டு மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தீயணைப்பு படை வீரர்கள்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சங்கரம்பாளையம் என்ற ஊரில் கிணற்றில் ஆடு ஒன்று விழுந்துவிட்டதாக கரூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அப்பகுதிக்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர்.
அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆடு இருப்பதை அறிந்து அதை மீட்கும் முயற்சியில் இறங்கினர். கயிறு கட்டி இறங்கி துரிதமாக செயல்பட்டு ஆட்டை உயிருடன் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு வாயில்லா ஜீவனான ஆட்டை மீட்டு கொடுத்ததால் ஆட்டை வளர்த்து வந்த பாட்டி மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்