மேலும் அறிய

கள்ளக்குறிச்சி: விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி உடல்… காவல்துறை தீவிர விசாரணை!

விடுதிக்கு சென்ற கௌசல்யா, விவசாய நிலத்தில் மஞ்சள் அறுவடை பணிகளை பார்வையிட சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு சாக்லேட் வழங்கி விட்டு சிறிது நேரம் விளையாடியுள்ளார்.

உளுந்தூர்பேட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரியின் உடல் 2 நாள் கழித்து சடலமாக மீட்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா. இவருக்கு 24 வயது ஆகிறது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கன்னியாஸ்திரி பயிற்சி பெற்று வந்திருக்கிறார். கன்னியாஸ்திரி பயிற்சி சில மாதங்களுக்கு முன்பு முடிந்திருக்கிறது. அதனை முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பி.எஸ்சி., கணித பாடம் எடுத்து படித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது, அது வீட்டிற்கு அருகில் இருப்பதால் அங்கேயே சேர்ந்து கணித படிப்பை தொடர்ந்து வந்தார். மூன்று ஆண்டுகள் உள்ள இந்த படிப்பில், முதலாமாண்டுதான் படித்துவந்தார் கௌசல்யா. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் வகுப்பு முடித்துவிட்டு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார் கௌசல்யா.

கள்ளக்குறிச்சி: விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி உடல்… காவல்துறை தீவிர விசாரணை!

விடுதிக்கு சென்ற கௌசல்யா அருகில் உள்ள விவசாய நிலத்தில் மஞ்சள் அறுவடை பணிகளை  பார்வையிட சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் சென்று அந்த சிறுவனுக்கு சாக்லேட் வழங்கி விட்டு சிறிது நேரம் விளையாடியுள்ளார். பின்னர் விடுதிக்குச் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் நேற்றுமுன்தினம் மதியத்தில் இருந்து கௌசல்யாவின் உடலை தேடிவந்தனர். 90 அடி ஆழ கிணற்றில் முழுமையாக தண்ணீர் இருந்ததால் அவரது உடலை கண்டு பிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. புதன் கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் போதிய வெளிச்சமின்மை காரணமாக கௌசல்யாவின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயணைப்பு துறையினரும் தேடும் பணியை நிறுத்தினர். 

கள்ளக்குறிச்சி: விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி உடல்… காவல்துறை தீவிர விசாரணை!

தேடும் பணியை நிறுத்திவிட்டு ராட்சத குழாய்கள் மூலம் 3 விவசாய நீர்மூழ்கி மோட்டார்களை பயன்படுத்தி விடிய விடிய கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த நிலையில் வியாழன் அன்று காலை கௌசல்யாவின் உடல் கிணற்றில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளான வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்த கௌசல்யாவின் உடலை கைப்பற்றினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாஸ்திரியான கௌசல்யாவின் மரணம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?

பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்

Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்

ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?

ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி

Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்

Embed widget