மேலும் அறிய

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?

நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் மீது நடிகர் தனுஷ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். பிரபல நடிகை நயன்தாரா. நயன்தாரா கடந்த 2022ம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வீடியோ நெட்ஃப்ளிக்சில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட பல காட்சிகளை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர். 

நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் வழக்கு:

அந்த படத்தை பிரபல நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை தன்னை கேட்காமல் பயன்படுத்தியதற்காக தனுஷ் நயன்தாராவிடம் ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், நயன்தாரா தரப்பினர் தனுஷிற்கு பதிலடி தரும் வகையில் விளக்கம் அளித்திருந்தனர். 

இந்த நிலையில், நடிகை நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அந்த அவர்களது திருமண ஆவணப்படத்தை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீது தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நயன்தாரா - விக்னேஷ்சிவன்:

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டது நானும் ரவுடிதான் படத்திற்காகவே ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவரும் காதல் வயப்பட்டனர். பின்னர், இவர்களது காதல் நீண்ட வருடங்களுக்கு பிறகு திருமணத்தில் முடிந்தது.

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியிருந்தனர். இவர்களது திருமண வீடியோ நெட்ஃப்ளிக்சில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

நயன் தந்த விளக்கம்:

ஆனால், இவர்கள் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் இவர்களது திருமண ஆவணப்படம் வெளியாகாமலே இருந்தது. இந்த நிலையில், நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 18ம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் வெளியானது. முன்னதாக, திருமண ஆவணப்படத்திற்கான டீசரில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தொடர்பான புகைப்படங்கள் இருந்தது.

தனது வொண்டர்பார் நிறுவனத்தின் அனுமதி பெறாமல் இந்த காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் நஷ்ட ஈடு கோரியிருந்தார். தனுஷிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நயன்தாரா, தான் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவர் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷிடம் அந்த காட்சிகளை பெற தொடர்ந்து முயற்சித்தும் அவர் அனுமதிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார். இதனால், தனுஷ் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் இணையத்தில் மாறி, மாறி மோதிக் கொண்டனர்.

10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு:

இதன்பின்னர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் – நயன்தாரா பங்கேற்றபோதும் பெரும் பேசுபொருளானது. அந்த நிகழ்ச்சியில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இந்த சூழலில், தனுஷ் தற்போது ரூபாய் 10 கோடி கேட்டு நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் இதனால் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நயன்தாரா தற்போது ராக்காயி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அந்த படத்தின் போஸ்டரில் அவள் போரை அறிவித்து விட்டாள் என்ற வாசகத்துடன் மறைமுகமாக தனுஷிற்கு எதிராக போராடத் தயார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் தொடர்ந்துள்ள வழக்கில் நயன்தாராவையும், அவரது கணவர் விக்னேஷ் சிவனையும் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் தற்போது எதிரிகள் போல மோதிக் கொள்வது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் – நயன்தாரா இணைந்து யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்துள்ளனர். மேலும், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு ஊதியமே வாங்காமல் ஆடியுள்ளார். இதை தனுஷே ஒரு முறை குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget