பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 234/ 77 ஆய்வு பயணத்தைத் தொடங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
அரசுப் பள்ளிகளில் ஆய்வுப் பணிகளை 234/ 77 என்ற பெயரில் தொடங்கிய அமைச்சர் அன்பில், உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்துகளோடு, 2022 அக்டோபர் 10ஆம் நாளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 234/ 77 ஆய்வு பயணத்தைத் தொடங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
கொளத்தூர் தொகுதியில் ஆய்வு
சம்பந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏ, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடன் சேர்ந்து ஆய்வில் ஈடுபட்டார். அவ்வப்போது தனது எக்ஸ் பக்கத்தில் பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் குறித்து எழுதி வந்தார் அன்பில். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பயணித்து 2024 நவம்பர் 14 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஆய்வை நிறைவு செய்தார்.
கழக @dmk_youthwing செயலாளர் - மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 27, 2024
திராவிட தீப்பந்தம் ஏந்தி போராடும் அவரின் கரத்தை இறுகப்பற்றி நடப்போம். திராவிடக் கொள்கையை ஏந்திய தலைவனால் மட்டுமே சமூகநீதியை காப்பாற்ற முடியும். சமத்துவ… pic.twitter.com/mFFH0b2thz
இதற்கான நிறைவு அறிக்கையை முதலமைச்சரிடம் இன்று வழங்கி வாழ்த்துப் பெற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.