மேலும் அறிய

State Education Policy: மாநிலக் கல்விக் கொள்கை குழுவில் இருந்து பேரா. ஜவஹர் நேசன்‌ விலகல்: பகீர் பின்னணி இதுதான்!

மூத்த IAS அதிகாரிகளின்‌ அதிகார எல்லைமீறல்களாலும்‌, முறையற்ற தலையீடுகளாலும்‌ இயங்க முடியாமல்‌ உயர்நிலை கல்விக்‌ குழு தடுமாறிக்கொண்டிருக்கிறது.

மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் இருந்து பேராசிரியர் ஜவஹர் நேசன்‌ விலகி உள்ளார். இதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் குறுக்கீடு மற்றும் தேசியக் கல்விக் குழு - 2020ன் அடிப்படையில் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கத் திட்டமிடப்படுவதையும் காரணமாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேராசிரியரும் மாநில உயர்நிலைக்‌ கல்விக்குழு உறுப்பினர்‌ – ஒருங்கிணைப்பாளருமான ஜவஹர் நேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''கல்வியின்‌ நலனையும்‌, மாநிலத்து இளைஞர்களின்‌ எதிர்கால நலன்களையும்‌ மனதில்கொண்டு, மாநிலத்தின்‌ சரித்திர மரபுகளையும்‌, தற்போதைய சூழலையும்‌ கருத்தில்கொண்டு, தனித்துவமான மாநிலக்‌ கல்விக்கொள்கையை வடிவமைப்பதற்காக, தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவை ஜூன்‌ 1, 2022-ல் உருவாக்கியது.

இதற்கு என்னால்‌ இயன்றவரை பங்களித்து வந்துள்ளேன். செயலகத்தையும்‌ அதற்கான வளங்களையும்‌ ஏற்படுத்துதல்‌, அடிப்படைக்கருப்பொருளை நிர்மாணித்து அதற்கான வழிகாட்டல்களை உருவாக்குதல்‌, ஏன்‌ தமிழ்நாட்டிற்கென தனிக்கொள்கை அவசியம்‌ என்ற கருத்துரு உருவாக்குதல்‌, problem statement என்று அழைக்கப்படும்‌ சிக்கல்கள்‌ குறித்த கருத்துரு (150 பக்கங்கள்‌) உருவாக்குதல்‌ (அது வழி காட்டும்‌ ஆவணம்‌ என்று உயர்நிலைக்‌ குழுவால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது) , சர்வதேச அளவில்‌ 113 வல்லுநர்கள்‌ கொண்ட 13 துணைக்குழுக்களை உருவாக்கி விவாதித்தது, தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்யும்‌ முறைகளை உருவாக்கியது. இதற்காக 50 பள்ளிகள்‌, 15 கல்லூரிகள்‌, 5 பல்கலைகழகங்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

இதுவரை 22 நிறுவங்களில்‌ மாதிரி ஆய்வுகளை முடித்தது ஆகியன அடங்கும்‌. இறுதியாக, நான்‌ மேற்கொண்ட தேவையான ஆய்வு முடிவுகளின்‌ அடிப்படையிலும்‌, 13 துணைக்குழுக்கள்‌ செய்த ஆய்வு முடிவுகளின்‌ அடிப்படையிலும்‌ பெற்ற தரவுகளைக்‌ கொண்டு Initial Policy Inputs  (232 பக்கங்கள்‌) என்ற தலைப்பில்‌ இடைக்கால அறிக்கையை எழுதி, உயர்நிலை குழுவிற்கு சமர்ப்பித்திருக்கிறேன்‌. இது நீண்டகாலத்‌ திட்டத்திற்கும்‌ நடைமுறை செயல்பாடுகளுக்கும்‌ திசைவழி காட்டக்கூடியது.

நம் மாநிலத்தில்‌ நிலவும்‌ தனித்த சூழல்களையும்‌, சிக்கல்களையும்‌ கணக்கில்கொண்டு இந்த அறிக்கையை எழுதியிருப்பதால்‌, இது நமக்கெனத் தனித்துவமான இறுதிக்கொள்கையை வகுக்கப்‌ பெரும்‌ பங்களிப்பை வழங்கும்‌. அடிப்படை வசதிகளும்‌ கட்டமைப்பும்‌ இல்லாத நிலை தற்போது வரை நீடிக்கிறது.  இந்நிலை ஏற்படுத்திய கடின சூழ்நிலைக்கு மத்தியில்‌ மேலே குறிப்பிட்ட வேலைகள்‌ அனைத்தையும்‌ நிறைவேற்றியிருக்கிறேன்‌.

தேசியக்கொள்கையைப் பின்பற்றி மாநிலக்‌ கல்விக்கொள்கை

ஆயினும்‌, இரகசியமாகவும்‌, ஜனநாயமற்ற முறையிலும்‌ செயல்படும்‌ தலைமையைக்‌ கொண்டதாலும்‌, சில மூத்த IAS அதிகாரிகளின்‌ அதிகார எல்லை மீறல்களாலும்‌, முறையற்ற தலையீடுகளாலும்‌ இயங்க முடியாமல்‌ உயர்நிலை கல்விக்‌ குழு தடுமாறிக்கொண்டிருக்கிறது. இக்காரணத்தினால்‌, உயர்நிலைக்‌ குழுவில்‌ ஒரு உறுப்பினராகவும்‌ ஒருங்கிணைப்பாளராகவும்‌ எனது பணியைத்‌ தொடர்ந்து செய்வதற்கும்‌, பங்களிப்பினைத்‌ தொடர்ந்து வழங்குவதற்கும்‌ மென்மேலும்‌ எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டேயிருந்தது. அதன்‌ விளைவாக, தேசியக்கொள்கை 2020 இன்‌ அடியைப்பின்பற்றி மாநிலக்‌ கல்விக்கொள்கையை வடிவமைக்கும்‌ திசையில்‌ குழு முன்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறது.

எனவே இந்த உயர்நிலைக்‌ குழு உருவாக்கும்‌ மாநிலக்‌ கல்விக்கொள்கை பெயரில்‌ மட்டும்‌ மாற்றம்‌ கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட்‌, சந்தை, சனாதன சக்திகளின்‌ நலன்களை கொண்டிருக்கின்ற தேசியக்கொள்கை 2020இன்‌ மற்றொரு வடிவமாகவே இருக்கும்‌. இந்நிலை நடித்தால்‌, அது தமிழக மக்களின்‌ விருப்புணர்வுகளுக்கும்‌, தமிழ்ச்‌ சமூகத்தின்‌ உயரிய விழுமியங்களுக்கும்‌ பெரும்பாலும்‌ எதிராக கல்விக் கொள்கையின்‌ விளைவுகள்‌ இருக்கும்‌ என அஞ்சுகிறேன்‌.

’ஐஏஎஸ்‌ அதிகாரி த.உதயச்சந்திரன்‌ அச்சுறுத்தல்’

அரசு ஆணை எண்‌ 98 குழுவிற்கு பணித்துள்ள ஆய்வு வரையறைகளை நீர்த்துப்‌போகச்‌ செய்யும்‌ நோக்கத்துடன்‌ உயர்நிலைக்‌ குழு செயல்பட்டபோதும்‌, குழுவின்‌ கொள்கை உருவாக்கும்‌ நடைமுறையையும்‌ தேவையான இலக்குகளை அடையும்‌ திட்டங்களை உறுதிப்படுத்தும்‌ வகையில்‌ எனது பங்களிப்பினைத்‌ தொடர்ந்தபடியே இருந்தேன்‌. எனினும்‌ மூத்த ஐஏஎஸ்‌ அதிகாரி த.உதயச்சந்திரன்‌, கடும்‌ சினத்துடன்‌ தகாத வார்த்தைகளைக்‌ கூறி என்னை அச்சுறுத்தி, அவர்‌ திணிக்கும்‌ நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டும்‌ என அழுத்தம்‌ தந்தார்‌.

இத்தகைய அதிகாரியின்‌ வரம்பு மீறிய செயல்களையும்‌ பாதுகாப்பற்ற நிலையையையும்‌ கடந்த சில மாதங்களில்‌ குழுத்தலைவரிடம்‌ பலமுறை முறையிட்டும்‌ கூட, அவை அனைத்தையும்‌ எதிர்வினை துளியேனும்‌ ஆற்றாமல்‌ புறந்தள்ளும்‌ போக்கைக்‌ கடைப்பிடித்தார்‌. தலைவர்‌ இதுவரை இந்நிகழ்வு குறித்து என்னுடைய கருத்தைக்‌ கேட்கவில்லை; இதில்‌ அடுத்து நான்‌ என்ன செய்ய வேண்டும்‌ என்ற வழிகாட்டுதலையும்‌ அவர்‌ தரவில்லை. மொத்தமாக, அதிகார வர்க்கத்தின்‌ தலையீடுகளிலிருந்தும்‌, குழுவிற்குள்‌ செயல்பாட்டை முடக்கும்‌ நடவடிக்கைகளிலிருந்தும்‌ குழுவின்‌ சுயமாக முடிவெடுக்கும்‌ உரிமையைப்‌ பாதுகாக்க குழுவின்‌ தலைமை தவறிவிட்டது என்பதையே இந்நிகழ்வுகள்‌ காட்டுகின்றன.

தீர்வினை வேண்டி குழுவின்‌ தலைவரிடம்‌ செய்த முறையீடுகள்‌ அனைத்தும்‌ கேட்கவே படாமல்‌ போனதால்‌, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடமும்‌ கடிதம்‌ சமர்ப்பித்தேன்‌. எனது கடிதத்திற்கு எந்த பதிலும்‌, இதுவரை கிடைக்கப்பெறவில்லை. சூழலை சரிசெய்ய இயன்ற அனைத்து வழிகளிலும்‌ முயன்று, களைப்புற்று, உண்மையும்‌ ஜனநாயகமும்‌ அற்ற குழுவின்‌ கழலும்‌, அதிகாரவர்க்கத்தின்‌ தலையீடுகளும்‌, அச்சுறுத்தலும்‌ என்‌ செயல்களை முடக்க, பெரும்பாலும்‌ ஆதரவற்ற நிலைக்குத்‌ தள்ளப்பட்டு, இதன்மேலும்‌ குழுவில்‌ நீடிப்பது பொருளற்றது என்று உணர்கிறேன்‌.

துயர்‌ தரும் முடிவு

எனவே கனத்த இதயத்துடன்‌, இந்த உயர்மட்டக்‌ குழுவில்‌ இருந்து நான்‌ விலகுகிறேன்‌ என்பதை அறிவிக்கிறேன்‌. நம்‌ மக்களுக்கும்‌, நம்‌ பெருமைமிகு அரசுக்கும்‌ உலகளாவிய அனுபவத்தால்‌ பெற்ற என்‌ அறிவையும்‌ திறமையையும்‌ கொண்டு பணியாற்றுகின்ற வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பிலிருந்து விலகுவதைக்‌ காட்டிலும்‌, எனக்கு மிகுந்த துயர்‌ தருவது எதுவும்‌ இல்லை. இருப்பினும்‌, இந்த நாட்டின்‌ குடிமகன்‌ என்ற முறையில்‌ மாநில கல்வி கொள்கை உருவாக்கத்திற்கு எனது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன்‌ என்று உறுதியளிக்கிறேன்‌.

மேலும்‌ நன்கு மெய்ப்பிக்கப்பட்ட மனிதநேய லட்சியங்களின்‌, அறிவியல்‌ ரீதியான அறக்‌கொள்கைகளின்‌, சமூக அறக்கொள்கைகளின்‌, தமிழ்நாட்டு மக்களின்‌ விருப்புணர்வுகளின்‌ அடிப்படைகளில்‌ ஒரு நேரிய, சமத்துவமான மதசார்பற்ற கல்விக்‌ கொள்கை உருவாக்குவதற்கான எனது போராட்டம்‌ என்றும்‌ தொடரும்‌‌".

இவ்வாறு பேராசிரியர்‌ லெ.ஐவகர்‌ நேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
CJI Chandrachud: தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
CJI Chandrachud: தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
WhatsApp: செம அப்டேட்! Whatsapp-இல் வரப்போகும் புதிய Chat ஃபில்டர் வசதி - எப்படி?
WhatsApp: செம அப்டேட்! Whatsapp-இல் வரப்போகும் புதிய Chat ஃபில்டர் வசதி - எப்படி?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
Embed widget