Jai Bhim Issue: ‛ஜெய் பீம் படத்துக்கு விருது தராதீங்க..’ அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கடிதம்!
இந்தப் படம் எந்த அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் தகுதியானதல்ல. எனவே "ஜெய் பீம்" திரைப்படத்திற்கு எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம் - வன்னியர் சங்கம்
ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்திவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. சூர்யா எங்கும் நடமாட முடியாது என பகிரங்க மிரட்டலும் விடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம் சூர்யாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிரட்டலை அடுத்து அவருக்கு திரைத்துறையினரும், சமூக செயற்பாட்டாளர்களும், ரசிகர்களும் பக்கபலமாக நிற்கின்றனர்.
இந்நிலையில் வன்னியர் சங்கம் சார்பாக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் மாநில தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “ வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் ஜெய் பீம் திரைப்படம் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டது. வன்னியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே இடையே வகுப்புவாத கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே சில காட்சிகள் ஜெய் பீம் திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளன.
#JUSTIN | ஜெய்பீம் படத்திற்கு எந்தவொரு அங்கீகராமோ, பாராட்டுதலோ, விருதோ வழங்கப்படக் கூடாது - வன்னியர் சங்கம் https://t.co/wupaoCQKa2 | #JaiBhim | #VanniyarSangam | #Suriya pic.twitter.com/Bo4tvRoxKE
— ABP Nadu (@abpnadu) November 18, 2021
இது ஏற்கனவே தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி படத்தில் வேண்டுமென்றே எழுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.
உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமானது, பட்டியலின ஆணும் அவரது மனைவியும் படும் துயரத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கத்திற்காக வேண்டுமென்றே சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
இந்தப் படம் எந்த அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் தகுதியானதல்ல. எனவே "ஜெய் பீம்" திரைப்படத்திற்கு எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம் என வன்னியர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Suriya Success Story: அஞ்சான்! எதற்கும் துணிந்தவன்! யார் இந்த சூர்யா?
Watch Video | நானும் வன்னியர்தான்.. அந்த மனசுதான் கடவுள்.. சூர்யாவை ஆதரிக்கும் பிரபல நடிகர்..
வன்னியர் சங்கமும் சந்தானமும்... கடந்த காலத்தில் கை கொடுத்த சம்பவம் தெரியுமா!
Suriya on Twitter: ஜெய் பீம்: இந்த அன்பு அலாதியானது... உருகி ட்விட் செய்த சூர்யா!