Global Investors Meet: உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்க திட்டம்..
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ' தொழில் வழிகாட்டி மையம் ' மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஐந்தரை லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தொழில்துறை, ஆட்டோ மொபைல், எரிசக்தித்துறை , தகவல் தொழில்நுட்ப துறை, சுகாதாரம் , வீட்டு வசதித்துறை , கைத்தறித்துறை , சுற்றுலா, பண்பாட்டுத்துறைகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தித்துறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்து அதிக முதலீடுகள் மேற்கோள்ளப்பட உள்ளன எனவும், அமெரிக்கா , ஜெர்மனி , பிரான்ஸ் , ஜப்பான் , தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்றும் கூறப்படுகிறது.
தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ' தொழில் வழிகாட்டி மையம் ' மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியை பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு ஒளிபரப்ப மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.