(Source: ECI/ABP News/ABP Majha)
IPS Officers Transfer: கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி: உளவுத்துறை ஐ.ஜி., ஆசியம்மாள் மாற்றம்: செந்தில் வேலன் நியமனம்!
உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் இடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விமர்சனங்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், உளவுத்துறையின் தோல்வி என கடுமையான குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் இடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உளவுத்துறை ஐ.ஜி.யாக செந்தில் வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
யார் இந்த ஆசியம்மாள்...?
கடந்த ஜனவரி 9 ம் தேதி தமிழக அரசால் காவல்துறையின் மிகவும் முக்கியமான பிரிவான உளவுத்துறையின் ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டார். தமிழக உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி. என்ற சாதனையை ஆசியம்மாள் என்ற சாதனையும் படைத்தார்.
#BREAKING | உளவுத்துறை ஐ.ஜி., ஆசியம்மாள் மாற்றம்: செந்தில் வேலன் நியமனம்!https://t.co/wupaoCQKa2 | #IG #police #Senthilvelan #TNGovt pic.twitter.com/URqPrH1XuS
— ABP Nadu (@abpnadu) July 20, 2022
தற்போது 56 வயதான ஆசியம்மாள் தூத்தக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் குரூப் 1 தேர்வு மூலமாக பணியில் சேர்ந்தார். படிப்பில் மிகவும் தேர்ந்தவரான ஆசியம்மாள் எம்.எஸ்.சி., எம்.டெக். எம்.பி.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார். குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறை பணியில் சேர்ந்த ஆசியம்மாள் வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவின் டி.எஸ்.பி.யாக தனது காவல்பணி வாழ்க்கையைத் தொடங்கினார்.
மகாபலிபுரம் டி.எஸ்.பி., சென்னை திருவொற்றியூர் சட்டம் –ஒழுங்கு உதவி ஆணையர், சென்னை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையர் போன்ற பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார், சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு, உளவுத்துறை எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவு, குடிமைப்பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு பிரிவு ஆகிய பிரிவுகளில் நீண்ட அனுபவம் கொண்டவர். கடந்த 2018ம் ஆண்டு ஆசியம்மாளுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பதவி உயர்வு பெற்ற பிறகு டி.ஐ.ஜி. ஆசியம்மாள் போலீஸ் பயிற்சி பள்ளி மற்றும் தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த மே மாதம் உளவுத்துறையின் டி.ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டார்.நேர்மையான அதிகாரியாக அறியப்படும் இவர் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறையில் திறம்பட பணியாற்றிய காரணத்தால், உளவுத்துறைக்கு மாற்றப்பட்டார். முன்னதாக, தமிழ்நாட்டின் முதல் பெண் உளவுத்துறை ஐ.ஜி. என்ற சாதனையைப் படைத்தத்துடன் உளவுத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி.யும் ஆசியம்மாளே என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர்க்கு பதவி உயர்வு :
தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பியாக மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான், சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன், காவல்துறை நவீனமயமாக்குதல் பிரிவு உதவி ஐ.ஜியாக கண்ணன், ஏ.எஸ்.பிக்கள் சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் ஸ்வாஸ் ஆகியோருக்கும் எஸ்.பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்