Income Tax Raid : 2-வது நாளாக தொடரும் சோதனை - அதிரடி காட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள்: சிக்கியது என்ன?
Income Tax Raid : சென்னையில் பாமாயில், பருப்பு சார்ந்த தொழில்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்துகின்றனர்.
Income Tax Raid : சென்னையில் பாமாயில், பருப்பு சார்ந்த தொழில்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்துகின்றனர்.
பொது விநியோகத் திட்டத்திற்கு(ரேஷன் கடைகள்) சப்ளை செய்யும் இரண்டு குழுமங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான, சென்னையில் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இரண்டு நிறுவனங்களும், பொது விநியோகத் திட்டத்தின்படி பாமாயில் மற்றும் பருப்பு சப்ளை செய்வதாக கூறப்படுகிறது. பொங்கல் தொகுப்பு மோசடி, அருணாச்சலா இன்பக்ஸ், இன்டகரேடட் சர்வீஸ் லிமிடெட் பொங்கல் தொகுப்பில் தரம் இல்லாத பொருட்களை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு லட்சம் டன் பருப்பு வகைகள் விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக இந்த நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
2-வது நாளாக சோதனை:
தமிழ்நாட்டில் சென்னை பிற இடங்களில், வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் சிறப்பு தொகுப்பில் முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழுப்பு துறைக்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, உலர் திராட்சை, முந்திரி, பாதாம், வேர்க்கடலை, போன்றவற்றை விநியோகம் செய்து வருகிறது. உணவுப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி மொத்த விநியோகம் செய்து வருகிறது.
சென்னை மண்ணடி தப்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலா இன்பாக்ஸ் என்கிகற நிறுவனம் பருப்பு, எண்ணைப் பொருட்கள் உட்பட உணவு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்கிறது. அதே போன்று தண்ணைடயார் பேட்டையில் உள்ள பெஸ்டால் மில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டர்க்ரேட்டடு சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட 5 நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும்
உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக நேற்று , தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 350க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுவரை, ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க
Samantha: மோசமான உடல்நிலை..! பிரபல நடிகை சமந்தா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி..! ரசிகர்கள் கவலை..
Kamalhassan: மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்...! ரசிகர்கள் மகிழ்ச்சி...